வால்பாறையில் 30 நாட்களுக்கும் மேலாக முழு கொள்ளளவால் நிரம்பி இருக்கும் சோலையாறு அணை..!

கோவை: சோலையாறு அணை கடந்த 30 நாட்களுக்கும் மேலாக அதன் முழு கொள்ளளவான 160 தண்ணீர் நிரம்பி உள்ளது.


கோவை: சோலையாறு அணை கடந்த 30 நாட்களுக்கும் மேலாக அதன் முழு கொள்ளளவான 160 தண்ணீர் நிரம்பி உள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த இரண்டு நாளாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தேயிலை தோட்டம் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சோலையார் அணை அதன் முழு கொள்ளளவு 165 அடியை தொட்டது. அணையில் இருந்து தண்ணீர் தமிழக விவசாயத்திற்கு பயன்படும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது மழை குறைந்து வெயில் நிலவி வருகிறது. இதனால் ஆறுகளில் தண்ணீர் வற்றி சோலையார் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. சோலையாறு அணை தற்போது 160 அடியாக தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1154 கன அடியாகவும், அணையின் நீர்மட்டம் இருப்பு 3290 கன அடியாக உள்ளது.



மேலும், அணையின் உயரம் 165 அடிக்கு தற்போதைய 160 அடி உள்ளது. அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றம் 1,215 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 30 நாட்களுக்கும் மேலாக அணையின் நீர்மட்டம் ஒரே அளவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...