பொள்ளாச்சி அருகே கோட்டூர் மற்றும் ஆழியார் இலங்கை அகதிகள் முகாமில் அகதிகள் மறுவாழ்வு துறை அதிகாரிகள் ஆய்வு!

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மற்றும் ஆழியார் இலங்கை அகதிகள் முகாமில் நேற்று அகதிகள் மறுவாழ்வு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மற்றும் ஆழியார் இலங்கை அகதிகள் முகாமில் நேற்று அகதிகள் மறுவாழ்வு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மற்றும் ஆழியார் பகுதிகளில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் நேற்று அகதிகள் மறுவாழ்வு துறை அதிகாரிகள் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அகதிகள் மறுவாழ்வு துறை இயக்குனரின் நேர்முக உதவியாளர் ராமதிலகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர்கள், வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆய்வின்போது இலங்கை அகதிகளின் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டு அறியப்பட்டது.

பல ஆண்டுகளாக முகாம்களில் வசித்து வரும் இலங்கை அகதிகளுக்கு, இந்திய குடியுரிமை வழங்க வேண்டும், அகதிகள் முகாமில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இலங்கை அகதிகள் அதிகாரிகளிடம் முன்வைத்தனர்.

இதையடுத்து, கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டு, விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...