கோவை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக நன்றி அறிவிப்பு தள்ளிப் போடப்பட்டுள்ளதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
கோவை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக நன்றி அறிவிப்பு தள்ளிப் போடப்பட்டுள்ளதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டு மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார். அதன் பிறகு, அவர் நேற்று மாலை கோவை வந்தார். தொடர்ந்து இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக இருந்தது.
இந்தநிலையில், கோவை மாவட்ட கலெக்டரை சந்தித்து காந்தியடிகள் உடைய கனவான கிராம சபை கூட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என வலியுறுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், கொரோனா காரணமாக நன்றி அறிவிக்கக்கூடிய சூழ்நிலை தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்டம் தோறும் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளதாகத் தெரிவித்தார். 2020 ஜனவரி மாதத்திற்கு மேல் கிராமசபை நடக்கவே இல்லை என்பதுதான் எங்களது குறை என்று தெரிவித்த அவர், இதனை மனுவாக அளித்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், பட்ஜெட்டில் கிராமசபைக்கு என தனி ஒதுக்கீடு குறித்து அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அடுத்த கிராமசபை விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் கூறினார்.
மேலும், கூட்டம் கூடுவதை அரசு விரும்பவில்லை என்பதனால் நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இன்று சில இரங்கல் வீடுகளுக்கு செல்ல வேண்டி இருப்பதாகவும் நாளை செய்தியாளர்களை சந்திப்பதாகவும் தெரிவித்தார்.