கிணத்துக்கடவு தொகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி... எம்.எல்.ஏ., செ.தாமோதரன் ஆய்வு..!

கோவை: கிணத்துக்கடவு தொகுதியில் கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி நடைபெறும் முகாமில் எம்.எல்.ஏ., செ.தாமோதரன் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கிணத்துக்கடவு தொகுதியில் கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி நடைபெறும் முகாமில் எம்.எல்.ஏ., செ.தாமோதரன் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மதுக்கரை ஒன்றியம் வழுக்குப்பாறை ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இந்தத் தடுப்பூசி முகாமில் 250 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.



இந்தநிலையில், தடுப்பூசி போடும் முகாமை இன்று கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் சமூக இடைவெளியுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

இதில், முன்னாள் எம்.எல்.ஏ., எட்டிமடை சண்முகம், வழுக்குப்பாறை ஊராட்சி மன்றத் தலைவர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....