கோவையில் தடுப்பூசி செலுத்தப்படும் விவரங்களை தெரிந்து கொள்ள 'கட்டணமில்லா கால் சென்டர்' வசதி!

கோவை: எழுதப் படிக்கத் தெரியாதவர்கள், ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் தடுப்பூசி செலுத்தப்படும் விவரங்கள் தெரிந்துகொள்ள 'கட்டணமில்லா கால் சென்டர்' வசதியை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்க மக்களின் நெடுநாள் எதிர்பார்ப்பாக உள்ளது.


கோவை: எழுதப் படிக்கத் தெரியாதவர்கள், ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் தடுப்பூசி செலுத்தப்படும் விவரங்கள் தெரிந்துகொள்ள 'கட்டணமில்லா கால் சென்டர்' வசதியை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்க மக்களின் நெடுநாள் எதிர்பார்ப்பாக உள்ளது.

கொரோனா நோய்த்தொற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகத் தடுப்பூசி முகாம் வளாகங்களுக்கு வெளியே நள்ளிரவு முதல் விடிய விடியக் காத்திருக்கத் துவங்கினர்.

மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் தடுப்பூசி செலுத்தப்படும் விபரங்கள் குறித்து ஒவ்வொரு நாளும் காலை 8:00 மணிக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

தடுப்பு ஊசி செலுத்தப்படும் முகாம்கள் குறித்த விபரங்கள் அல்லது அன்றைய தினம் தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை என்றாலும் அது குறித்த விபரங்கள் அனைத்தும், மாநகராட்சி இணையதள பக்கத்திலும் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தால் மக்கள் நள்ளிரவு நேரங்களில் காத்திருக்கும் பிரச்சினை முடிவுக்கு வந்தாலும், எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் மற்றும் ஸ்மார்ட் போன் வசதி இல்லாதவர்கள் தினமும் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர்.

இப்பிரச்சனைக்குத் தீர்வு காண 'கட்டணமில்லா கால் சென்டர்' வசதியை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

மேலும் காய்ச்சல், சளி கண்டறியத் தினமும் வீடுவீடாக செல்லும் களப்பணியாளர்கள் மூலமாகவும் தடுப்பு ஊசி செலுத்தப்படும் விபரங்கள் குறித்து ஒவ்வொரு நாளும் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து 'சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர்' அமைப்பின் தலைவர், சி. ஆர். ஜெயராமன் கூறியதாவது,

"சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தடுப்பு ஊசியைச் செலுத்திக் கொள்ள முகாம்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில் காத்திருப்பது நோய்த் தொற்று பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

தவிர தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள திட்டத்தால் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் மற்றும் ஸ்மார்ட்போன் வசதி இல்லாத மக்கள் ஒவ்வொரு நாளும் தடுப்பூசி செலுத்தப்படும் விபரங்கள் குறித்துத் தெரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் தகவலைத் தெரிந்து கொள்வதற்காக மற்றவர்கள் உதவியை நாடி வருகின்றனர்.

இதனால் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இப்பிரச்சனைக்குத் தீர்வு காண மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரத்தியேக 'கட்டணமில்லா கால் சென்டர்' வசதியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்படுத்த வேண்டும்.

இதன்மூலம் ஸ்மார்ட்போன் வசதி இல்லாதவர்கள் மற்றும் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் 'கால் சென்டரை' தொடர்பு கொண்டு தடுப்பூசி முகாம் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களுக்கு உள்ள சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

தவிர மாநகராட்சி சார்பில் தற்போது தினமும் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல், சளி பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து வருகின்றனர்.

அவர்கள் மூலமாகவும் நோய்த்தொற்று தடுப்புக்கான ஊசி செலுத்தப்படும் இடங்கள் குறித்து தினமும் அவர்கள் செல்லும் வீடுகளுக்கு மக்களிடம் நேரடியாகத் தகவலைத் தெரிவிக்கலாம்.

சமையல் காஸ் பெறுவதற்கு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள கட்டணமில்லா தானியங்கி தொழில்நுட்ப கால் சென்டர் வசதியைப் போலவே தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை எடுக்கலாம். முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை.

தொழில்நுட்ப பணியாளர்கள் அல்லது இந்த திட்டத்தைச் செயல்படுத்த வேறு ஏதேனும் உதவி தேவைப்படும் பட்சத்தில் எங்கள் அமைப்பு ஆலோசனையைத் தெரிவிப்பது மட்டுமின்றி திட்டத்தைச் செயல்படுத்த எங்களால் முடிந்த பங்களிப்பையும் செய்யத் தயாராக உள்ளோம். இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சருக்கும் நாங்கள் கடிதம் அனுப்பியுள்ளோம்."

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....