திருப்பூரில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள்... செய்தித்துறை அமைச்சர் வழங்கினார்..!

திருப்பூர்: திருப்பூரில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 388 பயனாளிகளுக்கு 74.01 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை செய்தித்துறை அமைச்சர் வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூரில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 388 பயனாளிகளுக்கு 74.01 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை செய்தித்துறை அமைச்சர் வழங்கினார்.

திமுக தேர்தல் பிரசாரத்தின் போது உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் அந்தந்த தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.



அவ்வாறு அனுப்பப்பட்ட மனுக்களில் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு வட்டத்தில் 388 பயனாளிகளுக்கு இன்று 74.01 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்தநிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் வினீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....