கோவையில் ஆகஸ்ட் 2 முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்; அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி - ஆட்சியர் தகவல்

: கோவை மாவட்டத்தில் வரும் திங்கள், ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி லிக்கபடுவதாக, ஆட்சியர் தகவல்.


கோவை: கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் வரும் திங்கள், ஆகஸ்ட் 2 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்படும், என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதன்படி பால், மருந்தகம், காய்கறி கடைகள் போன்ற அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும், என அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர், ஜி.எஸ்.சமீரன் கூறியிருப்பதாவது:

தமிழக அரசால் ஏற்கனவே விதிக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகளுடன், கோவை மாவட்டத்திற்கு கூடுதலாக கட்டுப்பாடுகள் வரும் 2ம் தேதி முதல் விதிக்கப்படுகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல்

மாலை 5 வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.

மேலும், கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கிராஸ்கட் சாலை, 100 அடிசாலை, காந்திபுரம் 5,6,7வது தெருக்கள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை (ராயல் நகர் சந்திப்பு), ரைஸ் மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, துடியலூர் சந்திப்பு, ஆகிய தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை, 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாலை 5 முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி, சில்லரை விற்பனைக்கு அனுமதியில்லை மற்றும் 50 சதவித கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இதனை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரள-தமிழக மாநில எல்லைகள் அனைத்தும் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்படி, சோதனைச்சாவடி வழியாக கோவை மாவட்டத்திற்குள் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை அல்லது கொரோனா தடுப்பூசி (2 தவனைகள்) செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக உடன் வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட சான்றுகள் இல்லையெனில் சோதனைச்சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....