:கோவையில் குடிபோதையில் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சமந்தப்பட்ட குற்றவாளிகளை 10 மணி நேரத்தில் கைது செய்த சிங்காநல்லூர் போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
கோவை: கோவையில் நேற்று வாலிபர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், துரிதமாக செயல்பட்டு சம்பவம் நடந்த 10 மணி நேரத்தில், 5 குற்றவாளிகளையும் கைது செய்துள்ள சிங்காநல்லூர் போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
நெல்லை மாவட்டம் விஜயநாராயணம், பகுதியை சேர்ந்த மணி (30) என்பவர் கோவை ஒண்டிப்புதூரில் தங்கி வேலைப்பார்த்து வந்துள்ளார். அவரும், அவருடைய நண்பரானசெந்தில் (30) என்வரும் அடிக்கடி செந்திலின் தோட்டத்திற்கு சென்று மது அருந்துவது வழக்கம். இந்த நிலையில் செந்திலின் தம்பி ரகுராமன் என்பவருடைய நண்பர்கள் அந்த தோட்டத்திற்குச் வந்து மது அருந்தி, கறிவிருந்து சாப்பிட்டுள்ளனர்.
அப்போது, மணிக்கும் அவர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவர்கள் மணியை சரமாரியாக கத்தியால்குத்திவிட்டு தப்பியுள்ளனர். தனியார் மருத்துவமனையில், உயிருக்கு போராடி வந்த மணி இன்று காலைபரிதாபமாக இறந்தார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, உதவி ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் தனி படை அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில், 10மணி நேரத்தில் கொலை குற்றவாளிகள் - அனிஷ் குமார், அஜித்குமார் சத்தியநாராயணா, ஆண்டனி மற்றும் ரகுராமன் ஆகியோர் தனிபடையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.துரிதமாக செய்யப்பட்ட காவலர்களுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.