வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு... வியாபாரிகள் மகிழ்ச்சி!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. வால்பாறைக்குக் கோவை திருச்சி, திருப்பூர், ஈரோடு, சென்னை, மதுரை உட்பட பல்வேறு ஊர்களிலிருந்துஏராளமான சுற்றுலாப் பயணிகள் வால்பாறைக்கு வந்துள்ளனர்.

தமிழகம் மட்டுமின்றி கேரளா கர்நாடகா பாண்டிச்சேரி இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். வால்பாறையில் நல்ல சீதோஷண நிலை விளங்குவதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இன்று வால்பாறை வந்துள்ளனர்.



வால்பாறையில் முக்கிய சுற்றுலாத் தலமான கூழாங்கல் ஆற்றில் குளித்தும் செல்பி எடுத்தும் மகிழ்கின்றனர். பசுமை போர்த்திய தேயிலைத் தோட்டங்களில் குடும்பத்துடன் படமெடுத்து மகிழ்கின்றனர்.

இதன் காரணமாக வால்பாறையில் உள்ள உணவகங்கள் மற்றும் காட்டேஜ்களில் கூட்டம் நிரம்பி வழிகின்றன. தள்ளுவண்டி மற்றும் நடைபாதை வியாபாரிகளுக்கும் வருமானம் இன்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....