கோவையில் முந்திரி பருப்பு இறக்குமதி செய்து 1லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மோசடி..!

கோவை: கோவையில் முந்திரி பருப்பு இறக்குமதி செய்து நூதனமான முறையில் 1லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த அக்கா தம்பி இருவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவையில் முந்திரி பருப்பு இறக்குமதி செய்து நூதனமான முறையில் 1லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த அக்கா தம்பி இருவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் இருந்து பருப்பு வியாபாரம் செய்வதாகக் கூறி சென்னையில் உள்ள மொத்த விற்பனைக் கடைக்கு தகவல் அளித்து 180 கிலோ முந்திரி பருப்பை பார்சலில் பெற்றுக்கொண்டு போலியான முகவரி கொடுத்து ஏமாற்றிய அக்கா, தம்பி இருவரும் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சவரிமுத்து என்பவரின் மகன் ஆரோக்கிய ஆனந்த பாஸ்கர். இவர் சென்னையில் முந்திரிப் பருப்பு மற்றும் எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவரின் மகள் மஞ்சுளா(29) மற்றும் அவரது சகோதரர் விவேக்(28) ஆகிய இருவரும் தாங்கள் தொண்டாமுத்தூர் அடுத்த பூலுவபட்டி பகுதிகள் நட்ஸ் வேர்ல்டு என்ற பெயரில் கடை நடத்தி வருவதாகவும் தங்களது நிறுவனத்திற்கு 180 கிலோ முந்திரிப்பருப்பு வேண்டும் என்றும் ஆர்டர் கொடுத்தனர். இதையடுத்து, ஆரோக்கிய ஆனந்த பாஸ்கர் 180 கிலோ முந்திரி பருப்பு மூட்டைகளை டிராவல்ஸ் மூலம் கோவைக்கு அனுப்பி வைத்தார். பார்சல் மூலம் வந்த முந்திரிப் பருப்பு மூட்டைகளை மோசடியான ஆவணங்கள் மூலம் வேறு முகவரிக்கு மஞ்சுளாவும் விவேக்கும் எடுத்துச் சென்றதாகப் புகார் எழுந்தது.

மேலும், முந்திரிப் பருப்பு வரவில்லை என்று கூறி உள்ளனர். இதையடுத்து ஆரோக்கிய ஆனந்த பாஸ்கர் கோவை ரத்தினபுரி போலீஸில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சரவணம்பட்டி விசுவாசபுரம் பகுதியைச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவரின் மகள் மஞ்சுளா(29) மற்றும் அவரது சகோதரர் விவேக்(28) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....