கோவையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

கோவை: கோவையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு லட்ச ரூபாய் நிதியும் வழங்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.


கோவை: கோவையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு லட்ச ரூபாய் நிதியும் வழங்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவையில் கடந்த 2019ம் ஆண்டு 7 வயது சிறுமியின் பெண் உறுப்பிலிருந்து ரத்தம் வரவே, அச்சமடைந்த பெற்றோர் மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்தனர். அப்போது, சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்த கோவை மாநகர் மேற்கு அனைத்து மகளிர் காவல்துறையினர், போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த மீன் பிடிக்கும் வேலை செய்து வரும் செந்தில் பிரபு என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்ததையடுத்து, செந்தில்குமார் மீது போக்சோ பிரிவு உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே, வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், செந்தில் பிரபுவுக்கு, 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 20 ஆயிரம் அபராதம் விதித்து கான்கிரீட் நீதிமன்றம் பொறுப்பு நீதிபதி ரவி உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூபாய் இரண்டு லட்சம் இழப்பீடு வழங்கவும் போக்சோ நீதிமன்றம் பொறுப்பு நீதிபதி ரவி உத்தரவிட்டார். இதையடுத்து, செந்தில் பிரபு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறை தண்டனை பெற்ற செந்தில்குமார் மீது கோவை மாநகர காவல் நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...