கோவை: கிணத்துக்கடவு அருகே மது அருந்த அனுமதித்த தள்ளுவண்டி கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வருகிறது. ஆனால் மது குடிக்கும் இடம் திறக்கப்படாததால் மது பிரியர்கள் வெளி இடங்களில் வைத்து மது அருந்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று மதியம் கிணத்துக்கடவு காவல்துறையினர் ரோந்து பணியில் சென்று கொண்டிருக்கும் போது சிக்கலாம் பாளையம் கல்லுக்குழி அருகே உள்ள மதுக்கடை அருகே தள்ளுவண்டிக் கடையில் டம்ளர், தண்ணீர், தின்பண்டங்கள் வைத்து மது அருந்த அனுமதி அளித்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த காவல்துறைமேற்கொண்ட விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த முரளி(25) என்பதும், இவர் தற்போது சிக்கலாம் பாளையம் பகுதியில் தங்கி தள்ளுவண்டிக் கடை நடத்தி மது அருந்த அனுமதி அளித்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, முரளியைக் கைது செய்த காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.