கோவையில் காணொளி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் ஆதங்கம்!

கோவை: விவசாயத்துக்குத் தடையின்றி மும்முனை மின்சாரம் கிடைப்பதில்லை- காணொளி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: விவசாயத்துக்குத் தடையின்றி மும்முனை மின்சாரம் கிடைப்பதில்லை -காணொளி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் தலைமையில் இன்று காணொளி வாயிலாக விவசாயிகள் முறையிட்டு கூட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி உழவர் மையம் கட்டிடத்தில், பொள்ளாச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு, காணொளி வாயிலாக பல்வேறு பிரச்சினைகளை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையிட்டனர்.

அப்போது தமிழகத்தில் கடந்த ஆட்சியில் விவசாயிகளுக்குத் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் கிடைக்கவில்லை, எனவே உடனடியாக விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமூர்த்தி அணையிலிருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. ஆனால் கடைமடை வரை விவசாயிகளுக்குத் தண்ணீர் செல்வதில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது.

பிரதான வாய்க்கால்கள் அருகே கிணறுகளை வெட்டி ஆழ்துளை குழாய்கள் மூலம் முறைகேடாகத் தண்ணீர் திருட்டு நடைபெற்று வருகிறது. அதேபோல் ஏராளமான தென்னை நார் தொழிற்சாலை நிறுவனங்கள் விவசாயத்துக்குச் செல்லும் தண்ணீரை முறைகேடாக எடுக்கின்றனர்.

இதைத் தடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு, தண்ணீர் திருட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....