கோவையில் பொது இடத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு மண்டை உடைப்பு!

கோவை: பொது இடத்தில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட மாநகராட்சி துப்புரவுப் பணியாளருக்கு மண்டை உடைப்பு, இதனையடுத்து 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: பொது இடத்தில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட மாநகராட்சி துப்புரவுப் பணியாளருக்கு மண்டை உடைப்பு, இதனையடுத்து 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் தெருவின் மையப் பகுதியில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தவர்களை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர் தட்டிக் கேட்டதற்காகக் கற்களைக் கொண்டு தாக்கி மண்டையை உடைத்த 2 பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை வெரைட்டி ஹால் ரோடு சிஎம்சி காலனி பகுதியில் வசித்து வருபவர் முருகன் என்பவரின் மகன் கார்த்திக்(24). இவர் கோவை மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் நேற்று மாலை பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். இவரது குடியிருப்பின் அருகில் மூன்று பேர் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த கார்த்திக் அவர்களை பொது இடத்தில் அமர்ந்து மது அருந்தக் கூடாது என எச்சரித்தார்.

இதையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதையடுத்து நேற்று இரவு கார்த்திக் தனது வீட்டின் அருகில் நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கார்த்திக் மாலையில் மது அருந்தி எச்சரித்த நபர்கள் அங்கு வந்து தகராற்றில் ஈடுபட்டனர்.

மேலும் கார்த்திகை தாக்கத் துவங்கினர். அருகிலிருந்த கற்களை எடுத்து கார்த்திக்கின் முகத்தில் வீசி எறிந்தனர். இதில் கார்த்திக்கிற்கு முகம் மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து கார்த்திக் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் அளித்த புகாரின் பேரில் காவல்துறை கார்த்திக் மீது தாக்குதல் நடத்திய அதே பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவரின் மகன் நாகராஜ் (37) மற்றும் மதுரை வீரன் (30) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....