வால்பாறையில் வனத்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம்..!

கோவை: வால்பாறையில் கடந்த சில தினங்களில் கரடி தாக்கி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் வனவிலங்குகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு, வனத்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.



கோவை: வால்பாறையில் கடந்த சில தினங்களில் கரடி தாக்கி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் வனவிலங்குகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு, வனத்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில தினங்களாக கரடி தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றொருவர் படுகாயத்துடன் கோவையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் வால்பாறையில் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. 



இதைத் தொடர்ந்து வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் வால்பாறை காந்திசிலை வளாகம் உட்பட முக்கிய இடங்களில் தேவையின்றி வெளியில் சுற்ற வேண்டாம், இரவு நேரங்களில் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும், குழந்தைகள் முதியவர்கள் தனியாக நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

மேலும் வனவிலங்குகளைப் பார்ப்பவர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்க தொலைபேசி எண்களை அறிவித்துள்ளனர். தகவல் தெரிவிக்க வன உயிரின வேளாணமை மற்றும் மீட்பு மையம் ரொட்டிக்கடை தொலைபேசி எண்: 04252 223222, வனவர் மனித விலங்கு முதல் தடுப்புக் குழு: 944 25 47 654. வனவர் தனியார் காடுகள் பிரிவு வால்பாறை வனச்சரகம்: 88839 85972. வனவர் அக்காமலை பிரிவு வால்பாறை வனச்சரகம்: 79585 271437 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.

இந்நிகழ்வில் மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திரன் மற்றும் வால்பாறை வனச்சரகம், மானாம்பள்ளி வனச்சரகம் வனவர்கள், காவலர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....