வடமாநிலங்களில் தயாரிக்கப்படும் போழ்கி, மீனாக்கரி, ஜடாவ் தங்க நகைகளுக்கு ‘கட்டாய ஹால்மார்க் 916' சட்டத்தில் விலக்கு: தமிழகத்தில் ‘மாங்கல்யத்துக்கு' கூட விலக்கு வழங்காததால் நகை தயாரிப்பாளர்கள் அதிருப்தி

கோவை: தங்க நகை தயாரிப்புக்கு கட்டாய ஹால்மார்க் 916 சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.



கோவை: தங்க நகை தயாரிப்புக்கு கட்டாய ஹால்மார்க் 916 சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.

இந்த சட்டத்தால் உலக அளவில் இந்தியாவில் தயாரிக்கப்படும் நகைகளுக்கு ‘பிராண்ட் இமேஜ்' கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வட மாநிலங்களில் தயாரிக்கப்படும் ஒரு சில நகைகளுக்கு இந்த சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதும் தமிழகத்தில் பொற்கொல்லர்கள் தங்கள் கைகளால் திறமையை வெளிப்படுத்தி தயாரிக்கப்படும் தாலிக்கு(மாங்கல்யத்துக்கு)கூட இந்த சட்டத்தில் விலக்கு அளிக்கப்படாது தங்க நகை தயாரிப்பாளர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தங்க நகை தயாரிப்பாளர்கள் சார்பில் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி கடந்த சில நாட்களாக பரவி வருகிறது அதில் கூறியிருப்பதாவது:

‘‘மத்திய அரசு 916 hallmark mandatory அவசரச் சட்டம், வெறும் 10 அல்லது 20 கார்பொரேட் கம்பெனிகளுக்கும், வெளிநாட்டு கம்பெனிகளுக்கும் பயன் தரும் வகையில் இயற்றப்பட்டுள்ளது. இதனால், தங்கநகை தொழிலில் ஈடுபட்டிருக்கும் லட்சக்கணக்கான பொற்கொல்லர்கள், சிறு வியாபாரிகள், பாரம்பரிய நகைக்கடைக்காரர்கள் தொழிலை விட்டு வெளியேறி விடுவார்கள். முடிவில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே இந்தத் தொழிலில் தொடர்ந்து இருப்பார்கள்.

தென்னிந்தியாவில் அதிகம் பிளைன் (plain)நகைகளே தயாரித்து மார்க்கெட்டில் விற்பனை செய்வது வழக்கம். அப்படிப்பட்ட நகைகளில் நம் பொற்கொல்லர்கள் கைத்திறனால் செய்யும் மாங்கல்யத்துக்கு கூட விதி விலக்கு அளிக்கப்படவில்லை. மேலும் விற்ற நகையில் தவறு இருந்தால் 5 மடங்கு அபராதம், மற்றும் கிரிமினல் குற்றமாகக் கருதித் தயாரித்தவருக்கும், விற்பனை செய்தவருக்கும் ஜெயில் தண்டனை வழங்கும் அளவுக்கு சட்டம் கடுமையாக உள்ளது.

ஆனால், வடநாட்டில் தயாராகும் போழ்கி, மீனாக்கரி, ஜடாவ் நகைகளுக்கு (உள்ளே அரக்கு, கெமிக்கல் பவுடர், கம்பி,வைத்து தயாரிக்கப்படுவது) கட்டாய ஹால்மார்க் 916 சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ‘‘வடக்கை வாழ வைக்கவும், தெற்கை தேய வைப்பதற்குமுண்டான திட்டமாகவே இந்தக் கட்டாய சட்டம் தெரிகிறது.''

இனி பொற்கொல்லர்கள் யாரும் ஆர்டரின் பெயரில் தயாரிக்கும் தங்க நகைகளுக்கு நேரடியாக bis hallmark சீல் போடமுடியாது என்று இந்த சட்டம் சொல்கிறது.

அப்படியே பொற்கொல்லர்களுக்கு சீல் வேண்டும் என்றால் அவர்கள் gst (RC) எடுக்கவேண்டும், அதுவும் ஆண்டுக்கு அதிகபட்சம் 40 லட்சம் வரை மட்டுமே(turn over) அதற்குமேல் போனால் வியாபாரிகள் லிஸ்டில் பொற்கொல்லர்களும் வந்துவிடுவர். (வரிகட்டவேண்டும்) வருடத்திற்கு வியாபாரம் செய்யும் பொற்கொல்லர்களுக்கு 40 லட்சம் வரை வரியில்லை என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டாம்.

வருடத்திற்கு 40 இலட்சம் என்றால் மாதம் சுமார் 8 பவுன் (64 gm) மட்டுமே பொற்கொல்லர்களுக்கு வரி இல்லாமல் அனுமதிக்கப்படுகிறது. வெளியூர் லையனுக்கு செல்லும் பொற்கொல்லர்களுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் நடைமுறையில் இந்த சட்டம் எப்படி சாத்தியப்படும்.

நகைக் கடைகளில் உள்ள பழைய hallmark முத்திரை இட்ட நகைகளையும் நான்கு குறி இட்டு, எடை, உருப்படி, போன்ற விவரங்கள் உடனே BIS அலுவலகத்துக்கு ஈமெயில் மூலம் சமர்ப்பிக்க வேண்டுமாம். இல்லை என்றால், பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்படுமாம். சட்டப்படி BIS அலுவலகம் தரக்கட்டுப்பாட்டைத் தவிர மற்ற விவரங்களைக் கேட்கமுடியாது என வக்கீல்கள் legal opinion தெரிவிக்கின்றனர். எனவே, இந்தியா முழுவதும் நகை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கலக்கதில் உள்ளனர். சட்டரீதியாக போராடவில்லை என்றால், தங்க நகைத் தொழில் மிகக் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.'' இவ்வாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியதாவது, ‘‘மத்திய அரசின் தங்க நகை தயாரிப்புக்கு கட்டாய ஹால்மார்க் 916 சட்டம், தங்கநகை தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் சாதகமான ஒன்றுதான். பல நன்மைகளை இந்த சட்டம் கொண்டுள்ளது. குறிப்பாக, இந்திய நகைகள் உலக அளவில் பிராண்ட் இமேஜ் கிடைக்கும். வட மாநிலங்களில் தயாரிக்கப்படும் நகைகளுக்கு சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு சில காரணங்கள் உள்ளன. அந்த நகைகள் அனைத்தும் அரக்கு, silver foil, உள்ளிட்ட சில பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. எனவே, அவற்றுக்கு ‘ஹால்மார்க்' முத்திரை பெறுவது கடினம். எனவே, அந்த நகைகளுக்கு சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தற்போது அமைச்சர் அறிவித்துள்ளார். இது, விரைவில் சட்ட வடிவமாக அமல்படுத்தப்படும். தங்க நகைகளைப் பொறுத்தவரையில் வட மாநிலத்தில் தயாரிக்கப்பட்டது, தென் மாநிலத்தில் தயாரிக்கப்பட்டது என்ற எந்தப் பாகுபாடும் பார்க்கப்படுவதில்லை. மொத்தத்தில் இந்தச் சட்டம் தங்க நகை தயாரிப்பு தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும். குறிப்பாக உலக அளவில் இந்திய நகைகளுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும்'' என்று கூறினார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....