கோவையில் கற்போம் எழுதுவோம் இயக்கம் சார்பில் ஆர்வமாக கல்வி கற்ற முதியோர்கள்!

கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற முகாமில் 4394 கற்போர்கள் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற முகாமில் 4394 கற்போர்கள் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

கற்போம் எழுதுவோம் இயக்கம் சார்பில் கோவை மாவட்டத்தில் 15 வட்டார வள மையத்தில் 610 மையங்களில் இந்த கல்வியாண்டிற்கான முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இதில் கல்வி பயிலாத 12 ஆயிரத்து 158 பேருக்கு கற்போருக்கான மதிப்பீட்டு முகாம் 29ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த முகாம் வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.



இந்த மூன்று நாட்களும் பள்ளிகள், பணிபுரியுமிடம், குடியிருப்பு பகுதிகள் என பல்வேறு இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது. இதனிடையே நேற்று நடைபெற்ற முகாமில் 4394 கற்போர்கள் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.



இம்மதிப்பீட்டு முகாம்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



இதில் அதிக அளவில் முதியோர்கள் கலந்து கொண்டு தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்களுக்கு எழுத, படிக்கப் போன்ற அடிப்படை கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டது.

Newsletter

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....