கோவை வனப்பகுதிகளில் யானையின் நடமாட்டம்... வெளியே வரும் விவரம் மற்றும் விழிப்புணர்வு அறிக்கை வனத்துறை வெளியீடு..!

கோவை: கோவை வனக்கோட்டம் வனப்பகுதியினை விட்டு வெளியே வரும் காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்த தின அறிக்கை மற்றும் மக்கள் எப்படி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பது குறித்தான அறிக்கையை வனத்துறையினர் இன்று வெளியிட்டுள்ளனர்.


கோவை: கோவை வனக்கோட்டம் வனப்பகுதியினை விட்டு வெளியே வரும் காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்த தின அறிக்கை மற்றும் மக்கள் எப்படி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பது குறித்தான அறிக்கையை வனத்துறையினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

இது பொது மக்களுக்கும் விவசாய மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை...

*ஒற்றை காட்டு ஆண் யானை வெளியே வந்த விவரங்கள்*

மேற்கண்ட பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் விவசாயிகள், செங்கல் சூளைகளை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் மக்கள். குறிப்பாக மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட யானைக்கல் பகுதி. கோவை வனச்சரகத்திற்குட்பட்ட மாங்கரை, லெப்பர்ஸ் காலனி பகுதி போலாம்பட்டி

வனச்சரகத்திற்குட்பட்ட பட்டியார் கோவில் பதி, இச்சிக்குழி, மேட்டுப்பாளையம், வனச்சரகத்திற்குட்பட்ட பட்டுப்பூச்சி தோட்டம், காளான் கம்பெனி சரக பகுதி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள்

�� அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளிவருவதை தவிர்த்து மிகவும் கவனத்துடன் இருக்கவும்.

�� இரவு நேரங்களில் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்கவும்.

�� தடாகம் பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியே தூங்குவதைத் தவிர்க்கவும்.

�� யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் குறிப்பாக இரவு நேரங்களில் யானைகள் அந்தப் பகுதியில் இருக்கிறது என கேள்விப்பட்டால் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்.

�� இரவில் வெளியே செல்லும் பொழுது கைவிளக்குகளை உடன் எடுத்துச் செல்லவும்.

�� மக்கள் காட்டுயானைகளின் வழித்தடங்களில் நடமாடுவதைத் தவிர்க்கவும்.

மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் யானை நடமாட்டம் இருப்பின் அருகில் உள்ள வனப் பணியாளர்களுக்கு தகவல் தருமாறு கோவை மாவட்ட வனத்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....