கோவை: கோவை சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று எவ்வித முன்னறிவிப்பு இன்றி மாதாந்திர பராமரிப்பு பணிக்காக தண்ணீர்பந்தல் மின்வாரிய அலுவலகம் சார்பில், மின் நிறுத்தம் செய்யப்பட்டதற்கு நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவை: கோவை சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று எவ்வித முன்னறிவிப்பு இன்றி மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, மின் நிறுத்தம் செய்யப்பட்டதற்கு நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம்(CAPA) தலைவர் என்.ஆர். ரவிசங்கர் கூறியதாவது,
தண்ணீர்பந்தல் மின்வாரிய அலுவலகம் சார்பில், இன்று காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மாதாந்திர பணிக்கான 'ஷட் டவுன்' அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இது குறித்து நுகர்வோருக்கு எந்தவித தகவலும் அனுப்பப்படவில்லை. மொபைல் போன்களில் எஸ்எம்எஸ் அனுப்பப்படுவது வழக்கம். ஆனால், இன்று அமல்படுத்தப்பட்டுள்ள 'ஷட் டவுன்' குறித்து எஸ்எம்எஸ் அனுப்பப்படவில்லை.
திடீர் மின்தடை காரணமாக முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ஆன்லைன் கல்வி பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். இந்த பிரச்சினை குறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் மின் வாரிய உயர் அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பி உள்ளோம்.
முன்கூட்டியே தகவல் அனுப்பியிருந்தால் அனைவரும் தங்களுக்கு தேவையான தண்ணீரை மோட்டார் இயக்கி இருப்பு வைத்து கொள்வார்கள். ஆன்லைன் கல்வி பயிலும் மாணவ, மாணவியரும் தங்களது கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் உபகரணங்களை முன்கூட்டியே சார்ஜ் செய்து தயாராக வைத்திருப்பார்கள்.
எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற அலட்சியம் இருக்கக் கூடாது. அது மக்களை பெரிய அளவில் பாதிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.