கோவையில் தொடரும் கொள்ளை சம்பவங்கள்: மதுக்கரையில் அடுத்தடுத்து உள்ள 7 வீடுகளில் பணம் கொள்ளை

கோவை: சமீபத்தில் கோவையில் அதிகரித்து வரும் கொள்ளை சம்பவங்களால் மக்கள் வீடுகளை பூட்டி விட்டு வெளியூர்களுக்கு செல்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.



கோவை: சமீபத்தில் கோவையில் அதிகரித்து வரும் கொள்ளை சம்பவங்களால் மக்கள் வீடுகளை பூட்டி விட்டு வெளியூர்களுக்கு செல்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.

கோவையை பொறுத்தவரை, பூட்டிய வீடுகளின் கதவுகளை உடைத்து, நகை, பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இதை தடுக்கும் பொருட்டு, ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை போலீசார் அதிகரித்தும், இந்த இடைவிடாது நடக்கும் கொள்ளை சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றும், அதிகாலை 4 மணி அளவில் கோவை அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



கோவை மதுக்கரை மார்க்கெட், ஸ்ரீ ராம் விலாஸ், பகுதியில் வில்லா எனப்படும் தொடர் வீடுகள் உள்ளன. இன்று அதிகாலை அங்குள்ள 7 வீடுகளில் கொள்ளையர்கள் அவர்களது கைவரிசையை காட்டியுள்ளனர் அங்கு வசிக்கும் ரவிக்குமார், லாட்ஜ் உரிமையாளர் ரவிச்சந்திரன், ஓய்வு பெற்ற எல்.ஐ.சி மேலாளர். வெங்கட், சாப்ட்வேர் இன்ஜினியர் உட்பட 7 வீடுகளில் அனைவரும் வீட்டின் மேல் பகுதியில் உள்ள படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருந்ததை, சாதகமாக பயன்படுத்திய கொள்ளையர்கள் வீட்டினுடைய பின்பக்க கதவை உடைத்து வீட்டின் கீழ் தளத்திற்கு சென்று பீரோவில் உள்ள பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது குறித்து, மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள், சம்பவ இடத்தில் தொடர்ந்து ஆய்வு மற்றும் விசாரணை செய்து வருகின்றனர். கொள்ளை போன பணம் எவ்வளவு என்பது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவராத சூழலில், கொள்ளையடித்த பணத்தின் மதிப்பு பல லட்சங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

நெருக்கமாக உள்ள அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை போன சம்பவம் மதுக்கரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....