காஞ்சிபுரத்தில் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கோவை நீதிமன்றத்தில் இருவர் சரண்!

கோவை: காஞ்சிபுரத்தில் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை நீதிமன்றத்தில் இருவர் சரணடைந்தனர்.


கோவை: காஞ்சிபுரத்தில் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை நீதிமன்றத்தில் இருவர் சரணடைந்தனர்.

காஞ்சிபுரம், பல்லவர் மேடு வ.உ.சி., நகரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் செந்தில்குமார் (42). இவரது சகோதரர் ரகுவரன் அதே பகுதியை சேர்ந்த சுகுமார் என்பவர் மகன் நாராயணமூர்த்தியை கடந்த, 2012ல் வெட்டி கொலை செய்தார். இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், ரகுவரன் தலைமறைவானார்.

இந்நிலையில், ரகுவரன் தந்தை நடராஜன் கடந்த 25ம் தேதி இறந்ததை கேள்விப்பட்டு ஊருக்கு வந்தார். இத்தகவலை அறிந்த சுகுமார், எட்டு பேர் கும்பலுடன் சென்று, செந்தில்குமார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர். அங்கிருந்த ரகுவரனை வெட்டி கொல்ல முயன்றபோது தப்பி ஓட்டம் பிடித்தார்.

அப்போது, அவர்களை செந்தில்குமார் தடுத்தபோது, அவரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பினர்.

இதையடுத்து, காஞ்சிபுரம் போலீசார், 8 பேர் கொண்ட கும்பலை தேடி வந்தனர். இதில், பிரபாகரன் (30), சதீஷ்குமார் (23), கோவை ஜே.எம்:5 நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். அவர்களை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் அப்துல்ரகுமான் உத்தரவிட்டார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....