வால்பாறையில் மீண்டும் கரடி தாக்கி தேயிலைத் தோட்டத் தொழிலாளி ஒருவர் படுகாயம் - மக்கள் அச்சம்!

கோவை: வால்பாறையில் மீண்டும் கரடி தாக்கி தேயிலைத் தோட்டத் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: வால்பாறையில் மீண்டும் கரடி தாக்கி தேயிலைத் தோட்டத் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று முன்தினம் வில்லோனி தேயிலை தோட்டத்தில் கரடி தாக்கி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மீண்டும் ஒரு தொழிலாளியை கரடி தாக்கியுள்ளது. வால்பாறையை அடுத்த அய்யர்பாடி தேயிலை தோட்டத்தில் இரவு 11.20 மணியளவில் அய்யர்பாடி இரண்டாம் டிவிசனை சேர்ந்த ஆசிர்வாதம் என்பவரது மகன் வசந்த்பிரபாகர் வயது (22), என்கிற நபர் கரடியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார்.

பின்னர், படுகாயமடைந்த வசந்த் பிரபாகரன் மீட்கப்பட்டு, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக வசந்த் பிரபாகரன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் வால்பாறை பகுதியில் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...