கோவை: விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், கோவை செல்வபுரம் பகுதியில் கைவினைக் கலைஞர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கத் தொடங்கினர்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக ஊரடங்கு அமலில் இருந்தநிலையில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீடுகள் தெருக்களில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு ஒரு வார காலத்திற்கு பூஜைகள், யாகங்கள், செய்யப்பட்டு பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று குளங்களில் கரைப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதை இந்துக்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்குதல் காரணமாக அதை சிறப்பாக கொண்டாட முடியவில்லை.

இந்தநிலையில், செப்டம்பர் 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து கைவினை கலைஞர்கள் தங்களுடைய விநாயகர் சிலை வடிவமைக்கும் பணியைத் தொடங்கி உள்ளனர். கடந்த முறை போதிய அளவு விற்பனை இல்லாததால் அவர்கள் நஷ்டம் அடைந்ததாகவும் இந்த முறை எப்படி என்று தெரியவில்லை எனவும் தெரிவித்தனர். விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 10ல் கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து கோவை செல்வபுரம் பகுதியில் சிலைகள் தயாரிக்கபட்டு வண்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ,விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து வழிபாடு செய்த பின்னர் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கமான ஒன்றாக நடைபெற்று வருகிறது.

வழக்கமாக இந்து அமைப்புகள் பெரிய சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் செய்து வரும் நிலையில், இந்த ஆண்டு பிரமாண்டமான சிலைகள் தயாரிக்க மட்டும் கைவினை கலைஞா்கள் தயக்கம் காட்டுகின்றனர். மேலும், கொரோனா முதல் அலையின் போது முந்திய ஆண்டு தயாரித்து வைத்திருந்த சிலைகளுக்கு வண்ணச்சாந்து பூசி கைவினை கலைஞர்கள் விற்பனை செய்துவிட்டனர். இந்த ஆண்டு சிறிய சிலைகள் மட்டுமே கையிருப்பில் உள்ள நிலையில், பெரிய சிலைகள் தயாரிக்கும் பணி இனியும் தொடங்கப்படாமல் கைவசம் உள்ள சிலைகளை மட்டும் தயார்படுத்தும் பணியில் கைவினைக் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். கல்லாமேடு பகுதியில் விநாயகர் சிலை தயாரிப்பு கைவினைக் கலைஞர் கூறும்போது விநாயகர் சிலைகளை அதிக எண்ணிக்கையில் இருப்பு வைக்க முடியாது. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கோவையில் தற்போது சிலைகள் தயாரிப்புப் பணிகளும் வண்ணச்சாந்து பூசும் பணிகளும் தொடங்கிவிட்டன.

பெரிய சிலை தயாரிப்புப் பணியில் ஈடுபட தயக்கமாக இருப்பதாகத் தெரிவித்தனர். இந்தநிலையில், கொரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் மீள வேண்டும் என்பதற்காக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாகக் கொண்டாட இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளனர்.