கோவை: உலக புலிகள் தினத்தை முன்னிட்டு, ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் மாணவர்களிடையே இணையவழியில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜூலை 29ஆம் தேதி உலக புலிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புலிகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் மாணவர்களுக்கு இணைய வழியாக ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக் கோட்ட உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் கணேஷ்ராம் அவர்கள் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

புலிகளால் வனத்தில் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். இதேபோல், புலிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் 9/6 (ஒன்பதாறு) சோதனைச் சாவடியில் கருத்தரங்கம் நடைபெற்றது.