மின்சார திருத்த சட்டம் 2021, சட்ட மசோதாவைக் கைவிடக்கோரி கருத்தரங்கம்! ஆகஸ்ட் 10-ம் தேதி அகில இந்திய அளவில் மின்சாரத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

கோவை: மின்சார தொழிலாளர் மற்றும் பொறியாளர் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம் கோவை சிவானந்தா காலணி காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.


கோவை: மின்சார தொழிலாளர் மற்றும் பொறியாளர் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம் கோவை சிவானந்தா காலணி காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

அதில், மின்துறையை பொதுத்துறையாகக் காத்திட, மின்சார திருத்தச் சட்டம் 2021- ஐ தடுத்திட ஆகஸ்ட் 10-ம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தம் அறிவிப்பு தொடர்பாக விளக்கக் கூட்டம் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் கந்தவேல் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில், அட்டைப்பட்டியல் பணியாளர் சங்க துணைப்பொதுச்செயலாளர் பக்தவச்சலம், தொழிலாளர் முன்னேற்றச் சங்க பொதுச்செயலாளர் மணிமாறன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

இக்கூட்டத்தில், நிர்வாகிகள் பேசுகையில், "மின்சார திருத்தச் சட்டம் 2021, சட்ட மசோதாவைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். இச்சட்டம் மூலம் மின்சார துறையில் வழங்கப்பட்டு வரும் மானியம் பறிபோகும்.

இதனால் விலைவாசி மிகவும் கடுமையாக உயரும். உணவு உற்பத்தி விலை உயரும். இதனால் பஞ்சம் பட்டினி உருவாகும். பொதுத்துறை நிறுவனங்கள் சேவை மனப்பான்மை கொண்டவை அவை தனியாருக்குக் கொடுக்கப்பட்டால் மிகவும் ஆபத்து.

புயல், வெள்ளம் காலங்களில் இரவு பகல் பாராது மின்சாரத்துறை செயல்படுகிறது. தனியாருக்கு வழங்கப்பட்டால் அவ்வாறு செயல்படாது. தற்போது, இத்துறை நம்பியுள்ள பல பொறியாளர்கள், ஊழியர்களின் வேலை பறிபோகும். பென்சன் திட்டங்கள் நிறுத்தப்படும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும்.

எனவே இச்சட்ட மசோதாவைக் கைவிடக்கோரி ஆகஸ்ட் 10-ம் தேதி மாபெரும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்," என்றனர்.



இக்கூட்டத்தில், கோவை மண்டலத்தில் உள்ள தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சங்க நிர்வாகிகள் சுமார் 200 பேர் 25 பெண் நிர்வாகிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...