கோவை: கோவையின் வளர்ச்சிக்காக அதிமுக ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் பணிகளை வேண்டுமென்றே திமுக முடக்கிவைத்துள்ளது என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

கோவை தெற்கு வடக்கு உட்பட அவிநாசி, சிங்காநல்லூர் பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி உட்பட 10 எம்.எல்.ஏ.க்களும், ஊராட்சி பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வந்து கோவை ஆட்சியர் சமீரனை சந்தித்து மனு அளித்தனர்.
அதற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த வளர்ச்சிப்பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் ஆகியவற்றை செயல்படுத்துவதில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு நேரங்களில் அதிமுக பிரதிநிதிகள் புறக்கணிக்கப்படுகின்றன.
மேட்டுப்பாளையத்தில் என்.எம்.ஜி.ஆர் பணிகளுக்கு பூமி பூஜை செய்ததை, திமுக அரசு காழ்புணர்ச்சியோடு நிறுத்தி உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக ஊராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து, சட்டமன்ற பிரதிநிதிகளுக்கு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுவதில்லை. திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்கள்.ஆனால், தேர்தலில் வெற்றி பெறாத திமுகவை சேர்ந்த கட்சிப் பொறுப்பில் இருக்கும் நபர்கள் சிலர் அரசு விழாக்களின் பூமி பூஜையில் கலந்துகொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் போல செயல்படுகிறார்கள்.இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கும்போது கோவையில் பல்வேறு பாலங்கள் உட்பட வளர்ச்சிப் பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டு நடைபெற்று வந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், அந்த வேலைகள் அனைத்தும் பாதியிலேயே நிறுத்தப்பட்டு இருப்பதாக அறிகிறோம். கோவையில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம், குடிநீர் குழாய் பதிவது போன்ற பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், மழை பெய்யும் போது குழிகளில் நீர் நிரம்பி போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன், இரு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்படுகிறது.
கோவை நீர்நிலைகளில், மழை நீர் சேமிப்பது தொடர்பாக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு, குளங்கள், ஏரிகள் அகலப்படுத்தப்பட்டு வந்தது. தற்போது, மழைக்காலம் என்பதால் மழை நீரை சேமிப்பதற்கு உடனடியாக திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் அமைச்சராக இருக்கும் போது, கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு துறையைச் சேர்ந்த ஆய்வு பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது கோவையில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெறுவது கிடையாது.
மொத்தத்தில், கோவை மாவட்டத்தை திமுக அரசு புறக்கணித்து வருகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வாக்களித்த கோவை மக்களும் இவ்வாறாகவே யோசிக்கின்றனர்.
கோவையில் அதிமுக ஆட்சியில் இருந்தே தொடர்ந்து வரும் தடுப்பூசி தட்டுபாடு குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், அந்தந்த பகுதிகளுக்கு தடுப்பூசியை பிரித்துக் கொடுக்கும் போது அதை செயல்படுத்தக் கூடிய அதிகாரிகள் அதில் முறைகேடுகள் செய்து, தடுப்பூசிகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடிய சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதை திமுக தடுக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த மனு கொடுக்கும் போது எம்.எல்.ஏ.க்கள் அம்மன் கே.கே. அர்ஜுனன், கே.ஆர் ஜெயராமன், பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, மனு அளிக்கும் போது ஆட்சியர் சமீரன், எழுந்து நின்று மனு வாங்காமல், அமர்ந்து கொண்டு மனு வாங்கியதாக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆட்சியரிடம் முறையிட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.