கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள தென் குமாரபாளையம் ஊராட்சி செயலாளர் 100-நாள் பணிகளில் முறைகேடு செய்வதாகக் கூறி, பொதுமக்கள் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

பொள்ளாச்சி அருகே உள்ள தென் குமாரபாளையம் ஊராட்சியில், பணியாற்றிவரும் ஊராட்சி செயலாளர், 100 நாள் வேலைத் திட்டப் பணிகளில், முறையீடு செய்து, பொன்னேகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த 100 நாள் பணியாளர்களுக்கு, பணி வழங்குவதில்லை எனக் கூறி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தைப் பொதுமக்கள் இன்று முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.
இதுகுறித்து அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
'தென் குமாரபாளையம் ஊராட்சி செயலாளர் அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்படுவதோடு, மது அருந்திவிட்டு பணிக்கு வருவதால், மக்கள் பணி செய்வதில் இடையூறு ஏற்பட்டு வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென்று' மனுவில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த பொள்ளாச்சி சார்-ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ ராவ் கோரிக்கை குறித்து விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.