கோவை மாநகரில் புதிய வேகக்கட்டுப்பாட்டு நடைமுறையை மதிக்காமல் சென்ற 35 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பு!

கோவை: கோவை மாநகரில் புதிய வேகக்கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றாமல் 30 கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்களை இயக்கிய 35 பேருக்கு தலா ரூபாய் 400 அபராதம் விதிக்கப்பட்டது.



கோவை: கோவை மாநகரில் புதிய வேகக்கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றாமல் 30 கிலோமீட்டருக்கு மேல் வாகனங்களை இயக்கிய 35 பேருக்கு தலா ரூபாய் 400 அபராதம் விதிக்கப்பட்டது.

கோவையில் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சாலைகளில் வேகக்கட்டுப்பாட்டு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கோவை மாநகருக்குள் 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். காந்திபுரம் முதல் கணபதி வரையிலும், 100 அடி ரோடு, கிராஸ் கட் ரோடு, பாரதியார் ரோடு, சுக்வார் பேட்டை, கிராஸ்கட் ரோடு, முதல் அவிநாசி ரோடு மேம்பாலம் வரையிலும், வைசியாள் வீதி முதல் செல்வபுரம் வரையிலும், 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என வேகக்கட்டுப்பாடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, கோவை மாநகரில் உள்ள சாலைகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேகக்கட்டுப்பாட்டு நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், நிர்ணயம் செய்யப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வாகனங்களை இயக்கியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து கோவை போக்குவரத்து போலீசார் கூறுகையில், ஸ்பீட் ரேடார் கன் என்று அழைக்கப்படும் வேகத்தை அளவிடும் நவீன கருவி மூலமாக வாகனங்களின் வேகத்தை கண்காணித்து 100 மீட்டர் தூரத்திலிருந்து போலீசார் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்படும். இதில் அதிவேகமாக சென்ற 35 பேருக்கு தலா 400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இவை தொடரும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....