வீடு வீடாக மக்கும்‌, மக்கா குப்பை மற்றும்‌ சுகாதாரக்‌ கழிவுகள்‌ சேகரிக்கப்பட்டு வரும்‌ பணிகளைக் கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில்‌ நடைபெற்றுவரும்‌ பல்வேறு வளர்ச்சிப்பணிகள்‌ மற்றும்‌ திடக்கழிவு மேலாண்மைப்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப.,‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில்‌ நடைபெற்றுவரும்‌ பல்வேறு வளர்ச்சிப்பணிகள்‌ மற்றும்‌ திடக்கழிவு மேலாண்மைப்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப.,‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில்‌ நடைபெற்றுவரும்‌ பல்வேறு வளரா்ச்சிப்பணிகள்‌ மற்றும்‌ திடக்கழிவு மேலாண்மைப்‌ பணிகள்‌ குறித்தும்‌, பாரதி பார்க்‌ பகுதிகளில்‌ உள்ள வீடுகளிலிருந்து பெறப்படும்‌ உணவு கழிவுகள்‌ மற்றும்‌ காய்கறி கழிவுகளிலிருந்து பெறப்படும்‌ பயோ கேஸ்‌ மூலம்‌ மின்‌ உற்பத்தி செய்யும்‌ மையத்தின்‌ செயல்பாடுகள்‌, குடிநீர் வழங்கும்‌ பணிகள்‌ குறித்தும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., இன்று 29.07.2021 நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.23க்குட்பட்ட பொன்னுரங்கம்‌ சாலையில்‌ துய்மைப்பணியாளர்கள்‌ வீடு வீடாகச் சென்று மக்கும்‌ மற்றும்‌ மக்கா குப்பைகளாகத் தரம்‌ பிரித்துச் சேகரிக்கப்பட்டுவரும்‌ பணிகளையும்‌, வாகனங்கள்‌ மூலம்‌ குப்பைகளைக் கொண்டு செல்லும்‌ பணிகளையும்‌ பார்வையிட்ட ஆணையாளர்‌‌, தூய்மைப்பணியாளர்களிடம்‌ குப்பைகளைச் சேகரிக்கும்‌ போது மக்கும்‌ குப்பை, மக்காத குப்பை எனத் தரம்‌ பிரித்துச் சேகரிக்க வேண்டும்‌.



சுகாதாரக்‌ கழிவுகளை (Sanitary Waste) தனியாக அப்புறப்படுத்தும்‌ படி தெரிவித்த பின்னர்‌ அப்பகுதியில்‌ உள்ள பொதுமக்களிடம்‌ சாலையோரங்களிலும்‌, பொது இடங்களிலும்‌ குப்பைகளைக்‌ கொட்ட வேண்டாம்‌. குப்பைத்‌ தொட்டிகளில்‌ மட்டுமே குப்பைகளைக் கொட்ட வேண்டும்‌. மாநகராட்சி பகுதிகளைத் தூய்மையாக வைத்திருக்கப் பொதுமக்கள்‌ முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென எனத் தெரிவித்தார்கள்‌.



அதனைத்‌ தொடர்ந்து மேற்கு மண்டலம்‌, ஆர்‌.எஸ்‌.புரம்‌ உழவர்‌ சந்தையில்‌ பெறப்படும்‌ காய்கறிக்கழிவுகள்‌, மக்கும்‌ குப்பைகள்‌ கொண்டு நுண்ணுயிர்‌ உரம்‌ (Micro Compost Centre‌) தயாரிக்கும்‌ பணிகள்‌ நடைபெறுவதைப் பார்வையிட்ட ஆணையாளர்‌‌, அங்குத் தயாரித்த உரத்தை அங்குள்ள பொதுமக்கள்‌ அல்லது விவசாயிகளுக்கு வழங்கும்படி உத்தரவிட்டார்கள்‌.



தொடர்ந்து, வார்டு எண்‌.22 மாநகராட்சி பாரதி பூங்கா அருகில்‌ உணவு கழிவுகள்‌ மற்றும்‌ காய்கறி, கழிவுகளிலிருந்து பெறப்படும்‌ பயோ கேஸ்‌ மூலம்‌ மின்‌ உற்பத்தி செய்யும்‌ மையத்தின்‌ செயல்பாடுகள்‌ குறித்துக் கேட்டறிந்தார்கள்‌.

தொடர்ந்து, அப்பகுதியில்‌ அமைந்துள்ள 38.90 இலட்சம்‌ கொள்ளளவு கொண்ட சிறுவாணி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்‌ தொட்டியின்‌ மூலம்‌ மாநகராட்சி பகுதிகளுக்கு வழங்கப்படும்‌ குடிநீர் பணிகள்‌ குறித்தும்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்‌.

இந்த ஆய்வின்‌ போது மேற்கு மண்டல உதவி ஆணையாளர்‌ சுந்தாராஜன்‌, செயற்பொறியாளர்‌ சரவணகுமார்‌, உதவிப் பொறியாளர்‌ கமலக்கண்ணன்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ சண்முகநாதன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...