கோவை கிணத்துக்கடவில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்!

கோவை: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து கோவை கிணத்துக்கடவில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து கோவை கிணத்துக்கடவில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக அரசு பொறுப்பேற்று மூன்று மாதங்களாகியும் தேர்தலின் போது வாக்குறுதி அளித்த நீட் தேர்வு ரத்து, குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை போன்றவற்றை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுக தலைமைக்கழகம் அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட 61 இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கிணத்துக்கடவு ஆர்.எஸ்.ரோடு பகுதியில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கிணத்துக்கடவு நகர செயலாளர் மூர்த்தி, மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் DL.சிங், முன்னாள் நகர செயலாளர் மனோகரன், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கண்ணம்மாள், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் லட்சுமணன், நகரத் துணைச் செயலாளர் பிரபு, தண்டபாணி, மாரிமுத்து உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



இறுதியாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கலந்து கொண்டவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...