கோவை: வால்பாறையில் நீட் தேர்வை ரத்து செய்வதாக பொய் வாக்குறுதி அளித்த திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை: வால்பாறையில் நீட் தேர்வை ரத்து செய்வதாக பொய் வாக்குறுதி அளித்த திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்புறம் சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வை ரத்து செய்வதாகவும், குடும்பத் தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்குவதாகவும் பொய் வாக்குறுதி கூறிய திமுக அரசை கண்டிக்கிறோம், விலைவாசியை கட்டுப்படுத்து கட்டுப்படுத்து, அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம், போடாதே போடாதே பொய்வழக்கு போடாதே என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, நகர செயலாளர் மயில் கணேசன், கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை வி அமீது, சலாவுதீன், பொன் கணேஷ், எஸ் கே எஸ் பாலு உட்பட ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.