கோவை: கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சி திமுக என்று சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை: கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சி திமுக என்று சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நீட் தேர்வை ரத்து, மாதந்தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை, உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுக்கு ஜெயராமன் அளித்த பேட்டியின்போது, 2019 நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றார்கள். ஆனால், கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.
அதேபோல் தற்போது பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதாகவும், நீட் தேர்வை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள், அதையும் நிறைவேற்றவில்லை என்றார்.
மேலும், தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத திமுகவை வன்மையாக கண்டிப்பதாகவும், தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.