கோவை: பொள்ளாச்சியில் தொடர் மழை காரணமாக தென்னை நார் உற்பத்தி நிறுத்தத்தால், மழைக்காலங்களில் பயன்படுத்தும் நவீன உலர் கலங்கள், மானிய விலையில் வழங்க அரசுக்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: பொள்ளாச்சியில் தொடர் மழை காரணமாக தென்னை நார் உற்பத்தி நிறுத்தத்தால், மழைக்காலங்களில் பயன்படுத்தும் நவீன உலர் கலங்கள், மானிய விலையில் வழங்க அரசுக்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பொள்ளாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் 700க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் உலர் களங்களில் ஈரப்பதம் ஏற்பட்டு உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் இத்தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். உற்பத்தியாளர்கள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
இதுகுறித்து உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-
பொள்ளாச்சியில், உற்பத்தி செய்யப்படும் தென்னை நார் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தற்போது வெளிநாட்டு ஏற்றுமதி விலை குறைந்த காரணத்தாலும், ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால், பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டதால், சுமார் 500 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, மழைக்காலங்களில் உற்பத்தியை நிறுத்தாமல் தொழிலை செய்ய, மத்திய, மாநில அரசாங்கங்கள் நவீன உலர் களங்களை மானிய விலையில் வழங்கி, தொழிலை மீட்டெடுக்க வேண்டும்.
இவ்வாறு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.