திருப்பூர்: தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றக்கோரி, திருப்பூர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கோலார்பட்டியில் எம்.எல்.ஏ. உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றக்கோரி, திருப்பூர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கோலார்பட்டியில் எம்.எல்.ஏ. உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வு ரத்து, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி உடுமலை ரோடு கோலார்பட்டியில், அதிமுக திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பில், உடுமலை எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் தலைமையில் அவரது வீட்டின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, பெண்களுக்கு மாத உதவித்தொகை 1000, மேலும் அதிமுகவினர் மீது போடப்படும் பொய் வழக்குகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தேர்தலின் போது திமுக பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தது. ஆனால் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், பொது மக்களை ஏமாற்றி வருகிறது என்று குற்றம் சாட்டிய உடுமலை ராதாகிருஷ்ணன், கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.