முன்ஜாமீன் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்ற போதகர் இரவில் கைது! ஆதரவாளர்கள் கூடியதால் பரபரப்பு!

கோவை: கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு பிஷப் அப்பாசாமி கல்லூரியில் நடைபெற்ற சி.எஸ்.ஐ திருமண்டல செயற்குழு கூட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, போதகர் முன்ஜாமீன் எடுத்து வீட்டிற்கு வந்த நிலையில் நேற்று இரவு புதியதொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு பிஷப் அப்பாசாமி கல்லூரியில் நடைபெற்ற சி.எஸ்.ஐ திருமண்டல செயற்குழு கூட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, போதகர் முன்ஜாமீன் எடுத்து வீட்டிற்கு வந்த நிலையில் நேற்று இரவு புதியதொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ திருமண்டல நிர்வாக குழு கூட்டம் கடந்த 19ஆம் தேதி பிஷப் அப்பாசாமி கல்லூரியில் நடந்தது. அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அதன் நிர்வாக குழு உறுப்பினரான வழக்கறிஞர் நேச மெர்லின் தாக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போதகர் சார்லஸ் சாம்ராஜ் ,வில்சன் குமார் உட்பட 15 பேர் மீது பந்தயக் நிலைய காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதேபோல் செயலாளர் ஜேக்கப் கொடுத்த புகாரின் பேரில் வழக்கறிஞர் நேச மர்லின் மற்றும் அமிர்தம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலிருந்து போதகர் சார்லஸ் சாம்ராஜ் முன்ஜாமீன் பெற்றிருந்தார்.

இந்த மோதல் தொடர்பாக கோவை திருமண்டல நிர்வாக குழு போதகர் சார்லஸ் சாம்ராஜ் பணியிடை நீக்கம் செய்தி வெளியிட்டது. இதற்கான நடவடிக்கையை கோவை திருமண்டல பிஷப் திமோத்தி ரவீந்தர் கொடுத்திருந்தார்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சார்லஸ் சாம்ராஜ் வீடு ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ திருமண்டல வளாகத்தின் உள்ளே அமைந்துள்ளது. ஏற்கனவே நடைபெற்ற மோதல் விவகாரத்தில் முன் ஜாமீன் பெற்ற சார்லஸ் சாம்ராஜ் நேற்று தனது வீட்டிற்கு திரும்பினார்.

அப்போது வீட்டில் குழந்தைகள் படிப்பிற்காக நிறுவப்பட்டிருந்த இன்டர்நெட் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தது. அதேபோல அவரது குடியிருப்பு வளாகத்தில் இருந்த சிசிடிவி இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிஎஸ்ஐ திருமண்டல சேர்மன் பிரின்ஸ் கால்வின் அறைக்கு சென்று பேசி விட்டுச் சென்றார். அப்போது அங்கு இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், வங்கி ஆவணங்களை சார்லஸ் சாம்ராஜ் எடுத்துக்கொண்டு தகராறு செய்ததாகவும், அலுவலக பெண்களிடம் வாக்குவாதம் செய்ததாகவும் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று நள்ளிரவு போதகர் சார்லஸ் சாம்ராஜ் கைது செய்யப்பட்டார்.சார்லஸ் சாம்ராஜ் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன் முன்பு குவிந்தனர்.

தொடர்ந்து சார்லஸ் சாம்ராஜ் ரேஸ்கோர்ஸ் போலீஸாரிடம் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் சேர்மன் பிரிண்ஸ் கால்வின்அலுவலகத்திற்கு சென்ற பொழுது அவர் தன்னை வரவேற்ற தாகவும் காபி கொடுத்து அமர வைத்து பேசி அனுப்பியதாகவும் கூறினார்.

தான் அங்கு எந்தவிதமான தகராற்றில் ஈடுபடவில்லை என்றும் அப்படி தகராற்றில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்து அதன் பின்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் ஒரு சிலரின் தூண்டுதலின் அடிப்படையில் தன் மீது இவ்வளவு அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் சார்லஸ் சாம்ராஜ் தெரிவித்தார். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டு பொள்ளாச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

போதகர் சார்லஸ் சாம்ராஜ் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் ஏராளமானோர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நேற்று இரவு பதட்டமாக காணப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...