வால்பாறையில் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி கரடி தாக்கி இறந்தவரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!

கோவை: வால்பாறையில் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி கரடி தாக்கி இறந்தவரின் உறவினர்கள் வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: வால்பாறையில் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி கரடி தாக்கி இறந்தவரின் உறவினர்கள் வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஏராளமான கரடி, சிறுத்தை, புலி, யானை போன்ற வனவிலங்குகள் உள்ளன. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் மனித-வன உயிரின மோதல்கள் அடிக்கடி நடைபெறுவது வழக்கமாகிவிட்டது.

இந்நிலையில், நேற்று இரவு வில்லோனி LD பகுதியில் மோகன்ராஜ் என்ற தேயிலைத் தோட்ட தொழிலாளி வீட்டு அருகே கரடி தாக்கி உயிரிழந்தார். அவருடைய உடல் பிரேதப் பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில், இன்று வால்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்த ஆனைமலை புலிகள் காப்பக தலைமையிடத்து உதவி வனப்பாதுகாவலர் பிரசாந்த் மற்றும் உதவி வன பாதுகாவலர் செல்வம் ஆகியோரை மோகன்ராஜ் உறவினர்கள் முற்றுகையிட்டு வன விலங்குகளிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும், இறந்து போனவரின் மனைவிக்கு அரசு வேலை வாய்ப்பு, குழந்தைகளின் கல்விச் செலவுக்கான ஏற்பாடுகள் செய்து தரும்படி வற்புறுத்தினர்.

இதைத்தொடர்ந்து, வால்பாறை நகர திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் பால்பாண்டி, அதிமுக நகர செயலாளர் மயில் கணேசன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை வீ.அமீது மற்றும் வனத்துறை அலுவலர்கள் அவர்களுடைய கோரிக்கையை அரசுக்கு தெரிவித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்களுடன் சமாதானம் பேசினர். இதை தொடர்ந்து முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...