கோவை: வால்பாறையில் கரடி தாக்கி தேயிலைத் தோட்ட தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது வில்லோனி தேயிலைத் தோட்டம். இங்குள்ள எல்டி பிரிவை சேர்ந்தவர் குழந்தை வேலு என்பவரின் மகன் மோகன்ராஜ் (36). இவர் இங்குள்ள தேயிலைத் தொழிற்சாலையில் உதவி மின் பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு இவர் தனது வீட்டு அருகில் சென்று கொண்டிருந்த பொழுது பக்கத்தில் புதரில் மறைந்திருந்த கரடி அவரை தாக்கியது. மோகன் ராஜன் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே, கரடி அவரை விட்டு விட்டு தப்பி ஓடியது.

இதையடுத்து, பலத்த காயமடைந்த மோகன்ராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இறந்துபோன மோகன்ராஜுக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 7 மற்றும் 9 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.
பின்னர், இது குறித்து தகவலறிந்த மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன், காவல் ஆய்வாளர் மகேஸ்வரி சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.