குறிச்சி பகுதி 94 வது வார்டு முதல் 100வது வார்டு வரை மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து குறிச்சி பிரபாகரன் மனு..!

கோவை: கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் இன்று கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கராவை சந்தித்து கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட குறிச்சி பகுதி 94வது வார்டு முதல் 100 வார்டு வரையிலான மக்களின் அடிப்படை பிரச்சனை குறித்து மனு அளித்தார்.


கோவை: கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் இன்று கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கராவை சந்தித்து கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட குறிச்சி பகுதி 94வது வார்டு முதல் 100 வார்டு வரையிலான மக்களின் அடிப்படை பிரச்சனை குறித்து மனு அளித்தார்.

குறிச்சி பிரபாகரன் இன்று கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கராவை சந்தித்து அளித்த அந்த மனுவில் கூறியதாவது:-

‘‘கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட குறிச்சி பகுதியில் 94 வது வார்டு முதல் 100 வது வார்டு வரையிலான பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் ஆண்டுகள் கடந்தும் குண்டும் குழியுமாக உள்ளதை சரி செய்ய வேண்டும்.

பாதாள சாக்கடை பணிகளின்போது பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு பாதிப்படைந்துள்ள குடிநீர் விநியோகத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும்.



எரியாத தெரு விளக்குகளை இரவில் சென்று பார்வையிட்டு அதனை சரி செய்ய வேண்டும். மாசடைந்து கிடக்கும் மயானங்களை சுத்தப்படுத்தி பராமரிக்க வேண்டும். கழிப்பிடங்களை மேம்படுத்தி சுகாதாரத்தை பராமரிக்கவும், புதிய கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். அதிகரித்து வரும் தெருநாய்த் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

பொதுமக்கள் பல்வேறு விதமான நோய்த்தொற்றுக்கு ஆளாகி விடாமல் காத்திட தூர்வாராமல் கிடக்கும் சாக்கடை கால்வாய்களில் அடைப்புகளை அப்புறப்படுத்தி சுகாதாரத்தை காத்திட வேண்டும்'' என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்து.

குறிச்சி தெற்கு பகுதி பொறுப்பாளர் இரா.கார்த்திகேயன், கழக நிர்வாகிகள் நிசார் அஹமது, ஈச்சனாரி மகாலிங்கம், பி.முரளிதரன், கே.கண்ணாமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...