வால்பாறையில் லாட்டரி விற்பனை செய்த இருவர் அதிரடியாக கைது!

கோவை: வால்பாறையில் லாட்டரி விற்பனை செய்த இருவரைக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.


கோவை: வால்பாறையில் லாட்டரி விற்பனை செய்த இருவரைக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் அண்டை மாநில லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகக் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அவரின் உத்தரவிற்கிணங்க சிறப்புக் காவல்படை உதவி ஆய்வாளர் முரளி தலைமையில் தலைமைக்காவலர் சுரேஷ் மற்றும் காவல் துறையினர் அடங்கிய சிறப்புப்படையினர் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து ரகசியமாகத் துப்பு துலக்கினர்.

வாடிக்கையாளர் போன்று அப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கு ஆன்லைன் மூலம் மூன்று மற்றும் நான்கு நம்பர் லாட்டரி விற்பனை செய்து கொண்டிருப்பதைப் பார்த்துச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த ஆனந்த் மற்றும் செல்வம் ஆகிய இருவரையும் பிடித்து அவர்களிடமிருந்த ரூபாய் 5920 யையும் கைப்பற்றி வால்பாறை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இருவர் மீதும் வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஷ்வரி வழக்குப் பதிவு செய்து மேல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...