கோவை: கோவையில் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், டெம்போ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், ஆட்டோ டிரைவர்கள் கால்டாக்சி டிரைவர்கள் உட்பட அனைவரையும் அழைத்து கோவை மாநகர காவல்துறை சார்பில் சாலை வார விழாவையொட்டி விபத்துகளைத் தவிர்ப்பது குறித்தும் நெரிசலை தவிர்ப்பது குறித்தும் சாலை விதிகளை மதிப்பது குறித்தும் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் வைத்து சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு டிரைவர்கள் மட்டும் காவல் துறையினர் கலந்துகொண்ட ஆலோசனை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கு போக்குவரத்து துணை ஆணையர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் லாரி, கால் டாக்ஸி, ஆட்டோ, அதனுடைய சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் வட்டார போக்குவரத்து ஆர்.டி.ஓ-க்கள் பாஸ்கரன், சரவணன், குமரவேல், சிவகுருநாதன் உட்பட நான்கு வட்டார அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்பொழுது கோவை மாநகரில் மேம்பாலங்கள் வேலை நடைபெறுவதால் போலீஸார் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை மீறி செல்வதால் பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் சாலை விதிகளை மதித்து நடக்கும் படி அறிவுறுத்தப்பட்டது. ஓவர் ஸ்பீடாக செல்லக்கூடிய வாகனங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது. மினி லாரி ஓட்டுநர்கள் அதிகாலையில் காய்கறி மற்றும் லோடுகள் ஏற்றிச் செல்லும் பொழுது ஓவர் ஸ்பீடாக செல்லக்கூடாது என கூறப்பட்டது. ஆட்டோ டிரைவர் கூட்ட நெரிசலை கவனத்தில் கொண்டு சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அதேபோல, சாலை மேம்பாலங்கள் வேலை நடைபெறுவதால் அனைவரும் அனைத்து ஓட்டுநர்களும் காவல்துறைக்கு சாலை விதிகளை மதித்து போக்குவரத்து நெரிசலை மனதில் கொண்டு மதித்து நடக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதேபோல ஓட்டுநர்களும் எங்கள் மீது கட்டாயமாக அபராதம் விதிக்கப்படுவதாகக் குறை கூறினர். போலீஸ் மற்றும் ஓட்டுநர்கள் நல்லுறவு தொடர்ந்து பேணிப் பாதுகாக்கப்படும் என அதற்காக இருவரும் ஒத்துழைக்க வேண்டும் என உறுதியளிக்கப்பட்டது.