கோவை: சென்னை போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து மெரினா பீச்சுக்கு குண்டு வைத்துள்ளதாக கூறிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்தனர். சென்னையில் உள்ள மாஸ்டர் கண்ட்ரோல் ரூமுக்கு நேற்று முன்தினம் ஒரு நபர் அழைத்துப் பேசினார்.
அப்போது அவர் சென்னை மெரினா கடற்கரையில் குண்டு வைத்து இருக்கு பாருங்க உடனே போய் வெடிகுண்டை எடுத்துடுங்க நான் சொல்லிட்டேன் நீங்க கேட்காம இருந்தா அவ்வளவு தான் என கூறி உள்ளார்.
போலீசார் யார் நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள் என கேட்க அந்த நபர் நான் மெரினாவில் குதிரையின் அருகே படுத்து இருக்கிறேன் என கிண்டலாக தெரிவித்தார். மேலும் அந்த நபர் அடிக்கடி தொடர்பு கொண்டு வெடிகுண்டு என்னாச்சு எடுத்துட்டீங்களா போலீஸ்காரங்க என்ன செய்றீங்க என்ன கேட்டபடி இருந்தார்.
அவருடைய தொலைபேசி அழைப்புகளில் டார்ச்சர் அதிகமானது. இதையடுத்து சென்னை போலீசார் மெரினா கடற்கரையில் பல இடங்களில் தீவிர சோதனை நடத்தினர்.
ஆனால், வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து நபரை செல்போன் சிக்னல் வைத்து தேடினர். அப்போது அந்த நபர் கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம் பகுதியில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சென்னை தனிப்படை போலீசார் நேற்று கோவைக்கு வந்து அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவரது பெயர் பீர்முகம்மது 41, அவர் கூலி வேலைக்கு செல்வது தெரியவந்துள்ளது.
போலீசார் விசாரித்தபோது சரக்கு குடித்து போதையில் இருந்தேன். யாருக்காவது போன் செஞ்சு மிரட்டலாம் என்று முடிவு பண்ணினேன். போலீஸார் 100 நம்பர் எண்ணுக்கு போன் போட்டு மிரட்டினேன் என அவர் கூறினார். இது போல இவர் பலமுறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.