கோவை: செம்மொழி மாநாடு நடத்தி கோவைக்கு பெருமை சேர்த்த முத்தமிழறிஞர் கலைஞருக்கு காந்தி பார்க் ரவுண்டானாவில் திருஉருவச்சிலை அமைக்க வேண்டும் என கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த பொற்கொல்லர்கள் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை எழுந்துள்ளது.

பாரம்பரிய நகைத்தொழில் புரியம் விஸ்வகர்மா சமுதாயத்தினருக்கு, இந்து அறநிலையத்துறை கீழ் வரும் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் அறங்காவலர் குழுவில் (தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப் போல) இடம் பெறச்செய்து ஆவணம் பிறப்பிக்க உள்ள நிலையில், மேலும், தங்க தாலிகள்(மாங்கல்யம்) செய்ய பொற்கொல்லர்களுக்கும், விஸ்வகர்மா சமுதாயத்தை சார்ந்த பாரம்பரிய நகை கடைக்காரர்களுக்கு மட்டுமே தயாரித்து, விற்பனை செய்ய உரிமம் மாநில அளவில் வழங்கப்படவேண்டும் என்றும், பல்வேறு கோரிக்கைகள் முன்னிட்டு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்தியை மரியாதையை நிமித்தமாக கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த பொற்கொல்லர்கள் கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர், S.ராகுநாதன் சுப்பையயா(SR) சந்தித்தார்.
அச்சந்திப்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததோடு, கோவையில் செம்மொழி மாநாடு நடத்தி கோவைக்கு பெருமை சேர்த்ததோடு, தமது ஆட்சிக்காலத்தில் கோவைக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை வழங்கி முன்னேற்ற முன்னெடுப்பை எடுத்து செயல்படுத்திய முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞருக்கு காந்திபார்க் ரவுண்டானாவில் திருஉருவச்சிலை அமைக்க வேண்டும் எனவும் கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த பொற்கொல்லர்கள் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
கூட்டமைப்பு சார்பாக முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படும் என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி நம்பிக்கையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, பொற்கொல்லர்கள் கூட்டமைப்பின் செயலாளர் B.தண்டபாணி மற்றும் சான்றிதழ் பெற்ற பொற்பணியாளர்கள் நிர்வாகிகள் கனகசபாபதி, மாணிக்கவாசகம், தேவராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.