கிணத்துக்கடவில் அரசுக்கு சொந்தமான நிலம் மீட்பு-வருவாய் துறை நடவடிக்கை!

கோவை: கிணத்துக்கடவு அருகே மன்றாம் பாளையத்தில் வருவாய்த் துறை நடவடிக்கையால் அரசுக்குச் சொந்தமான நிலம் மீட்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு அருகே மன்றாம் பாளையத்தில் வருவாய்த் துறை நடவடிக்கையால் அரசுக்குச் சொந்தமான நிலம் மீட்கப்பட்டது.

கிணத்துக்கடவு அருகே உள்ள மன்றாம் பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் அரசுக்குச் சொந்தமான இடத்தை தனியார் ஒருவர் செடிகள், தண்ணீர் குழாய் வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி மன்றாம் பாளையம் பொதுமக்கள் கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகாவிடம் மனுகொடுத்தனர்.

இதனையடுத்து கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா அரசுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு செய்த நபரிடம் 7-நாட்களுக்குள் அகற்றி கொள்ளுமாறு அவகாசம் வழங்கப்பட்டு வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.



அந்த நபர் அரசுக்குச் சொந்தமான இடத்தை காலி செய்யாமல் பயன்படுத்தி வந்ததால் இன்று அதிரடியாக மன்றாம்பாளையத்திற்க்கு சென்ற கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா தலைமையில் வருவாய்த் துறையினர், பொதுமக்கள் முன்னிலையில் தனியார் ஆக்கிரமித்து வைத்திருந்தஒரு சென்ட் நிலத்தை புல்டோசர் எந்திரம் மூலம் அகற்றப்பட்டு அரசு நிலம் மீட்கப்பட்டது.

இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...