கள்ளச்சந்தையில் குட்கா விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - பொள்ளாச்சி டி.எஸ்.பி எச்சரிக்கை!

கோவை: கள்ளச்சந்தையில் குட்கா விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொள்ளாச்சி டி.எஸ்.பி தமிழ்மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கள்ளச்சந்தையில் குட்கா விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொள்ளாச்சி டி.எஸ்.பி தமிழ்மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கள்ளச்சந்தையில் குட்கா விற்பனை செய்வதைத் தடுக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள, குடோன்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் காவல்துறை தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சியில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், செயல்பட்டு வரும் கடை உரிமையாளர்கள் மற்றும் குடோன் உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று பொள்ளாச்சி டிஎஸ்பி தமிழ்மணி உத்தரவிட்டார்.

இதையடுத்து, பொள்ளாச்சி சரகத்திற்கு உட்பட்ட கிழக்கு காவல் நிலையம், மேற்கு காவல் நிலையம், நெகமம் காவல் நிலையம், தாலுக்கா காவல் நிலையம் உள்ளிட்ட அனைத்து காவல் நிலையங்களிலும், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் பங்கேற்ற கடை உரிமையாளர்களிடம், குட்கா பொருட்களை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கினார்.



மேலும், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தால், குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், உள்ளாட்சி நிர்வாகம் மூலம் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும், பொள்ளாச்சி டிஎஸ்பி தமிழ்மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...