கோவை: புதிய ரேஷன் கார்டுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்த நிலையில், கிணத்துக்கடவு வட்ட வழங்கல் அலுவலகத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் உள்ள 70 நியாயவிலைக் கடைகளில் 32 ஆயிரத்து 762 ரேசன் கார்டுகள் உள்ளன. இந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் புதிய ரேஷன்கார்டு கேட்டு 800-க்கும் மேற்பட்டோர் கிணத்துக்கடவு வட்ட வழங்கல் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர்.
இதில் 584 விண்ணப்பங்கள் புதிய ரேஷன் கார்டு வழங்க தேர்வு செய்யப்பட்டன. தற்போது புதிதாக அச்சிட்ட 139 ரேஷன் கார்டுகள் கிணத்துக்கடவு வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு வந்துள்ளன. இதனால், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதிய ரேஷன் கார்டு வாங்க வருபவர்களிடம சரியான ஆவணங்களை கிணத்துக்கடவு வட்ட வழங்கல் அலுவலர் முத்து, சரிபார்த்த பின்னரே புதிய ரேஷன் கார்டுகளை வழங்கப்படுகிறது.