கோவை: பொள்ளாச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த திமுக பிரமுகரை மகாலிங்க புரம் காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

பொள்ளாச்சியை அடுத்த புளியம்பட்டி பகுதியில், தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாகப் பொதுமக்கள் பொள்ளாச்சி மகாலிங்க புரம் காவல் நிலையத்திற்குப் புகார் அளித்திருந்தனர்.
அதனடிப்படையில், பொள்ளாச்சியை அடுத்த புளியம்பட்டி பேருந்து நிலையம் அருகே இன்று கண்காணித்து வந்தனர்.
அப்போது அங்குத் தடை செய்யப்பட்டுள்ள கேரளா சிக்கிம் மாநில லாட்டரிகளை விற்பனை செய்து கொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையைத் தொடர்ந்து அவர், அதே பகுதியைச் சேர்ந்த பாபா முருகேசன் என்பதும், அவர் கோவை தெற்கு மாவட்ட திமுக தொண்டர் அணி இணைச் செயலாளர், என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரிடம் இருந்து 270 லாட்டரி சீட்டுகளை காவல்துறை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.