ஆன்மிக குருவுக்கு சுற்றுச்சூழல் மீது ஏன் இவ்வளவு அக்கறை? – சத்குரு அதிரடி பதில்!

கோவை: ஈஷா சார்பில்‌ ‘ஆனந்த சங்கமம்‌' என்ற இறப்பு நிகழ்ச்சி ஆன்லைன்‌ வாயிலாக நேற்று (ஜூலை 25) நடைபெற்றது. இதில்‌ பொதுமக்களின்‌ பல்வேறு கேள்விகளுக்கு சத்குரு பதில்‌ அளித்தார்‌.



கோவை: ஈஷா சார்பில்‌ ‘ஆனந்த சங்கமம்‌' என்ற இறப்பு நிகழ்ச்சி ஆன்லைன்‌ வாயிலாக நேற்று (ஜூலை 25) நடைபெற்றது. இதில்‌ பொதுமக்களின்‌ பல்வேறு கேள்விகளுக்கு சத்குரு பதில்‌ அளித்தார்‌.

ஈஷா சார்பில்‌ ‘ஆனந்த சங்கமம்‌' என்ற இறப்பு நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, ‘‘எனக்குத் தெரிந்த வரை இந்திய குருமார்களில்‌ யாருமே பொருளாதாரம்‌ பற்றியும்‌ சுற்றுச்சூழல்‌ பற்றியும்‌ உங்கள்‌ அளவிற்கு பேசியது இல்லை. இந்த 2 விஷயங்களுக்கு நீங்கள்‌ ஏன்‌ இவ்வளவு முக்கியத்துவம்‌ தருகிறீர்கள்‌?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு சத்குரு அளித்த பதில்‌:

‘‘பொருளாதாரத்துற்கு நான்‌ முக்கியத்துவம்‌ தரவில்லை. நீங்கள்‌தான்‌ அதற்கு அதிக முக்கியத்துவம்‌ கொடுத்துள்ளீர்கள்‌. அதனால்‌, அதுகுறித்து பேச வேண்டி உள்ளது. அதேசமயம்‌, நம்‌ நாட்டில்‌ பொருளாதார வளர்ச்சியை அடையும்‌ நோக்கத்தில்‌ சுற்றுச்சூழல்‌ பெரிதும்‌ அழிவுக்கு உள்ளாகி உள்ளது.



உலகில்‌ ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மக்களில்‌ 33 சதவிகிதம்‌ பேர்‌ இந்தியாவில்‌ உள்ளனர்‌. இதற்கு அடிப்படை காரணம்‌ மண்ணில்‌ தேவையான சத்துக்கள்‌

இல்லை. பொதுவாக, விவசாய நிலத்தில்‌ 4 முதல்‌ 5 சதவிகிதம்‌ கரிம வளம்‌ இருக்க வேண்டும்‌. குறைந்தப்பட்சம்‌ 2 சதவிகிதம்‌ கரிம வளம்‌ இருந்தால்‌தான்‌ அதை

மண்‌ என்றே சொல்ல முடியும்‌ என ஐ.நா அமைப்பு கூறுகிறது. ஆனால்‌, நம்‌ நாட்டு மண்ணில்‌ சராசரி கரிம வள அளவு வெறும்‌ 0.68 சதவிகிதம்‌தான்‌ உள்ளது. இந்த நிலை இப்படியே போனால்‌, அடுத்த 30 ஆண்டுகளில்‌ மண்‌ மணலாக மாறி நாட்டில்‌ விவசாயமே செய்ய முடியாத நிலை ஏற்படும்‌. இப்படி இருக்கும்‌ போது சுற்றுச்சூழல்‌ குறித்து பேசாமல்‌ எப்படி இருக்க முடியும்‌?

நம்‌ உடலே இந்த மண்ணில்‌ இருந்து வந்ததுதான்‌. இதை பலரும்‌ உணராமல்‌ இருக்கிறார்கள்‌. அவர்கள்‌ மண்‌ வளத்தை பாதுகாப்பது என்னுடைய பிரச்சனை அல்ல என எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்‌. மண்‌ வளமாக இருந்தால்‌தான்‌ சத்தான உணவு கிடைக்கும்‌. ஊட்டச் சத்துமிக்க உணவு இல்லாமல்‌ தவிக்கும்‌ மக்களிடம்‌ சென்று ஆன்மிகம்‌ குறித்து பேசுவது அசிங்கமான செயல்‌. அதை நான்‌ ஒரு போதும்‌ செய்யமாட்டேன்‌.

இதுபோன்ற பிரச்சினைகள்‌ இதற்கு முன்னர்‌ இருந்தது இல்லை. ஆழ்வார்கள்‌, சித்தர்கள்‌ வாழ்ந்த சமயத்தில்‌ இதுபோன்ற பிரச்சனைகள்‌ இல்லை. அதனால்‌, அவர்கள்‌ பேசவில்லை. இப்போது இது மிக முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. அதனால்‌, நான்‌ சுற்றுச்சூழல்‌ குறித்து அதிகம்‌ பேசுகிறேன்‌'' என்று சத்குரு கூறினார்‌.

மேலும்‌, அவர்‌ பேசுகையில்‌, “தமிழ்நாட்டில்‌ உள்ள ஒவ்வொருவருக்கும்‌ ஒரு சொட்டு ஆன்மிகத்தையாவது கொண்டு சேர்த்துவிட வேண்டும்‌ என்பது என்னுடைய விருப்பம்‌. அதற்காக, உயிர்‌ நோக்கம்‌, சூரிய சக்தி போன்ற யோக பயிற்சிகளை தமிழ்நாடு முழுவதும்‌ இலவசமாகக் கொண்டு சேர்க்கும்‌ பணியை வரும்‌ ஆண்டுகளில்‌ தீவிரப்படுத்த இருக்கிறோம்‌.

ஈஷா யோகா மையம்‌ என்பது ஏராளமான சாமானியர்களின்‌ உதவியாலும்‌ ஆதரவாலும்‌ பக்தியுணர்வாலும்‌ உலகம்‌ போற்றும்‌ அளவிற்கு இப்போது வளர்ந்துள்ளது. இதை தமிழ்‌ மக்கள்‌ முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்‌.

தமிழ்‌ கலாசாரத்தை மறக்காமல்‌ இருக்க வாரத்தில்‌ ஒரு நாளாவது ஆண்கள்‌ வேஷ்டியும்‌, பெண்கள்‌ சேலையும்‌ அணிந்து கொள்ள வேண்டும்‌. பக்தியில்‌ ஊறிய தமிழ்‌ கலாசாரத்தை எப்போதும்‌ பேணி வளர்க்க வேண்டும்‌” என்றார்‌.

முன்னதாக, ஈஷா சார்பில்‌ ‘உயிர்‌ நோக்கம்‌' என்ற 3 நாள்‌ யோகா நிகழ்ச்சி ஜூலை 23 முதல்‌ 25 ஆம்‌ தேதி வரை ஆன்லைனில்‌ இலவசமாக நடைபெற்றது. இதில்‌ தமிழ்நாடு முழுவதும்‌ இருந்து சுமார்‌ 27 ஆயிரம்‌ பேர்‌ பங்கேற்றனர்‌. அதன்‌ நிறைவு நிகழ்வாக இந்த ஆனந்த சங்கமம்‌ நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...