மாநகராட்சி பூங்காக்கள் ஆய்வு- கோவை மாநகராட்சி பூங்காக்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தல்‌!

கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ பகுதிகளில்‌ தூய்மைப்பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌ குறித்தும்‌ அவர்களுக்கான அறிவுரைகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர் ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., வழங்கினார்கள்‌.


கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ பகுதிகளில்‌ தூய்மைப்பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌ குறித்தும்‌ அவர்களுக்கான அறிவுரைகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர் ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., வழங்கினார்கள்‌.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில்‌ தூய்மைப்பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌ குறித்து அவர்களுக்கான அறிவுரைகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ரஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., வழங்கியும்‌, தெற்கு மண்டல பகுதிகளிலுள்ள மாநகராட்சி பூங்காக்களை இன்று (27.07.2021) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.96க்குட்பட்ட சுந்தராபுரம்‌ சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌‌, அவ்வலுவலகத்தில்‌ தூய்மைப்பணியாளர்களின்‌ வருகைப்‌ பதிவேடுகளை ஆய்வு செய்த பின்னர்‌, அனைவரும்‌ பணிக்கு வருகை தந்துள்ளார்களா என கேட்டறிந்த பின்னா்‌, தூய்மைப்பணியாளார்கள்‌ நேரம்‌ தவறாமல்‌ பணிக்கு வருகை தர வேண்டும்‌.

வீடுதோறும்‌ குப்பைகளைச் சேகரிக்கும்‌ போது மக்கும்‌ குப்பை, மக்காத குப்பை எனத் தரம்‌ பிரித்துச் சேகரிக்க வேண்டும்‌. மழைநீர் வடிகால்‌ கால்வாய்களில்‌ அடைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி நீர் தேங்காமல்‌ செல்லும்‌ வகையில்‌ கால்வாயினை சுத்தப்படுத்திட வேண்டும்‌.

தூய்மையான மாநகராட்சியாகத் திகழ தங்களுடைய பணிகளைச் சிறப்பாகச் செய்திட வேண்டும்‌. அனைவரும்‌ முகக்கவசம்‌ அணிந்து பணியாற்ற வேண்டும்‌. கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திட வேண்டும்‌.

அனைவரும்‌ தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்‌ என அறிவுரைகள்‌ வழங்கிய பின்னர்‌, பொதுமக்கள்‌ சாலையோரங்களிலும்‌, பொது இடங்களிலும்‌ குப்பைகளைக்‌ கொட்டக்‌ கூடாது. குப்பைத்‌ தொட்டிகளில்‌ மட்டுமே குப்பைகளைக் கொட்ட வேண்டும்‌. தூய்மையான மாநகராட்சியாகத் திகழ அனைவரும்‌ ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென என தெரிவித்தார்கள்‌.



அதனைத்‌ தொடர்ந்து, தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.87, பிருந்தாவன்‌ சர்க்கிள்‌ மையத்தில்‌ அமைந்துள்ள மாநகராட்சி பூங்கா மற்றும்‌ சிறுவர்‌ விளையாட்டுத்‌ திடல்‌, வார்டு எண்‌.91, திருநகர்‌ காலனி மாநகராட்சி பூங்கா மற்றும்‌ சிறுவர் விளையாட்டுத்‌ திடல்‌ ஆகிய பூங்காக்களை ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌ அவர்கள்‌, பூங்காக்களின்‌ பராமரிப்பு பணிகளை மேற்கொள்பவர்களிடம்‌ பூங்காவிற்குள்‌ நடைபாதைக்கு வருபவர்களை நுழைவுவாயில்‌ வெப்பமானியைக் கொண்டு உடல்‌ வெப்பநிலையைக் கண்டறிய வேண்டும்‌.



கிருமிநாசினி மூலம்‌ கைகளைச் சுத்தப்படுத்திட நுழைவுவாயிலில்‌ கிருமிநாசினி வைத்திட வேண்டும்‌. பதிவேடுகளில்‌ அவர்களது பெயர்களைக் குறிப்பிட வேண்டும்‌. பூங்காக்களின்‌ உட்பகுதி மற்றும்‌ சுற்றுப்புறத்தினை குப்பைகள்‌ இல்லாமல்‌ தூய்மையாக வைத்திருக்க வேண்டும்‌ என சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம்‌ தெரிவித்த பின்னர்‌,



தொடர்ந்து, வார்டு எண்‌.76 தெலுங்கு பாளையம்‌ நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தில்‌ ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌‌, கர்ப்பிணி தாய்மார்கள்‌, தாய்‌ சேய்களுக்குப் போடப்படும்‌ தடுப்பூசிகள்‌, சிகிச்சை முறைகள்‌, தாய்‌ சேய்‌ நல பாதுகாப்பு அட்டையில்‌ அதன்‌ விபரங்களைப் பதிவு செய்து பராமரிப்பது, அதனைக் கணினியில்‌ பதிவேற்றம்‌ செய்யப்படும்‌ பணிகள்‌, டாக்டா்‌.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில்‌ கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது குறித்து ஆய்வு செய்தார்கள்‌.



இந்த ஆய்வின்போது, தெற்கு மண்டல உதவி ஆணையாளர்‌ சரவணன்‌, செயற்பொறியாளர்‌ ஞானவேல்‌, உதவி செயற்பொறியாளர்‌ சுந்தாராஜ்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ லோகநாதன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...