கோவை: ஆவாரம் பாளையம், டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் நற்பணி அறக்கட்டளை சார்பில் நல உதவி பொருட்கள் வழங்கப்பட்டு ஏழை குடும்பத்தினருக்கு இறுதி சடங்கு செய்ய நிதியுதவி வழங்கப்பட்டது.
கோவை: ஆவாரம் பாளையம், டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் நற்பணி அறக்கட்டளை சார்பில் நல உதவி பொருட்கள் வழங்கப்பட்டு ஏழை குடும்பத்தினருக்கு இறுதி சடங்கு செய்ய நிதியுதவி வழங்கப்பட்டது.
நமது நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவரும் மாணவ-மாணவியர் மற்றும் இளைஞர்களின் கனவு ஆசான் பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு ஆவாரம் பாளையம் பகுதியில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் நற்பணி அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு நலப் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நற்பணி அறக்கட்டளை தலைவர் ரங்கநாதன் கூறியதாவது:-
"கொரோனா நோய்த்தொற்று பரவல் முதல் அலை பரவிய 2020, மார்ச் 24 முதல் ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்யும் நோக்கில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் நற்பணி அறக்கட்டளையைத் துவக்கினோம்.
நோய்த்தொற்று பரவல் முதல் அலை காலத்தில் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கினோம்."
"நோய்த்தொற்று பரவல் இரண்டாவது அலை மிக அதிக பாதிப்பை ஏற்படுத்திய காரணத்தால் எங்கள் அறக்கட்டளை, Srinithi E Routes and travels மற்றும் JCI Coimbatore Metropolis சார்பில், உணவு வழங்கும் திட்டத்தையும் விரிவுபடுத்தினோம்.
மொத்தம் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கினோம். இது தவிர நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களுக்குக் கடந்த வாரம் வரை முதல் 10 நாட்களுக்குத் தேவையான மூன்று வேளை சத்தான உணவு வகைகள் அவர்களது வீட்டுக்கே சென்று வழங்கி வந்தோம்.
இந்த சேவை ஆவாரம் பாளையம் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளில் எங்கள் அறக்கட்டளை உறுப்பினர்கள் செயல்படுத்தினார்."
"இவை எல்லாவற்றுக்கும் மேல், ஏழை, எளிய மக்களின் குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் எங்கள் அறக்கட்டளையைத் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் இறுதிச் சடங்கு செய்வதற்கான நிதி உதவியை வழங்கி வருகிறோம்.
இந்த சேவை தொடர்ந்து நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். எனவே இறுதிச் சடங்கு செய்வதற்கு நிதி உதவி தேவைப்படும் ஏழை மக்கள் 9597974842 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்."
"அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று ஆவாரம் பாளையம் பகுதியில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் ஏழை மக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை மாவு, டீ தூள், சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கினோம்."
"எங்கள் அறக்கட்டளையில் தற்போது 50 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். சேவை செய்ய விருப்பமுள்ளவர்கள் எங்கள் அறக்கட்டளையைத் தொடர்பு கொண்டு தங்களை இணைத்துக் கொள்ளலாம்.
நாட்டின் வளர்ச்சிக்கும் இளைஞர்களின் எழுச்சிக்கும் அரும்பாடுபட்டவர் டாக்டர் அப்துல் கலாம் ஐயா. எனவே அவரது பெயரைக் கொண்டு நாங்கள் அமைத்துள்ள இந்த அறக்கட்டளை சார்பாக எதிர்வரும் காலங்களிலும் பல்வேறு உதவிகளை மக்களுக்குத் தொடர்ந்து செய்வோம்."
அறக்கட்டளை செயலாளர் முனுசாமி, பொருளாளர் நிர்மல் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.