உடுமலையில் முதல்முறையாக தொல்லியல் வரலாற்று சுற்றுலா வளர்ச்சித் திட்டம் முன்னெடுப்பு - மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி ஆய்வு!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் முதல்முறையாக தொல்லியல் வரலாற்று சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி அரவிந்தகுமார் ஆய்வு மேற்கொண்டார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் முதல்முறையாக தொல்லியல் வரலாற்று சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி அரவிந்தகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

உடுமலை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் தொல்லியல் துறை சார்ந்த புராதான சின்னங்கள் அதிகம் காணப்படுகிறது. இந்த தொல்லியல் இடங்கள் மற்றும் சின்னங்களை பிரபலப்படுத்தும் நோக்கில் சுற்றுலா துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் அறக்கட்டளை சார்பிலும், தொல்லியல் ஆர்வலர்கள் சார்பிலும், உடுமலை சுற்றுலா வளர்ச்சி குழு உறுப்பினர்கள் சார்பிலும் மாவட்ட சுற்றுலா அதிகாரிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



அதன் அடிப்படையில், மாவட்ட சுற்றுலா துறை அதிகாரி அரவிந்த குமார் அவரது தலைமையிலான குழு நேற்று உடுமலை தளி பகுதியில் உள்ள திணைக்குளம் கிராமத்தில் எத்திலப்ப நாயக்கர் சம்மந்தப்பட்ட தொல்லியல் சின்னங்களை ஆய்வு செய்தது.

உடுமலை வரலாற்றில் முக்கிய நிகழ்வாக வெள்ளையனையே தூக்கில் போட்ட பாளையம், வெள்ளையன் தான் எண்ணற்ற இந்தியர்களை தூக்கிலிட்டும், சுட்டும் வீழ்த்தியுள்ளான். ஆனால், வெள்ளையன் ஒருவனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய மன்னர்தான் இந்த எத்திலப்ப நாயக்கர். உடுமலையிலிருந்து 16கிமீ தொலைவில் திருமூர்த்தி மலை செல்லும் வழியில் உள்ள தளி பாளைப்பட்டு என்று சொல்லப்படும் சல்லிபட்டி பாளையக்காரர்.

மைசூர் மன்னராக இருந்த திப்பு சுல்தானையும், தமிழ்நாட்டின் பாஞ்சாலங்குறிச்சி மன்னனான வீரபாண்டிய கட்டபொம்மனையும் வீழ்த்திய ஆங்கிலேயர்கள் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் அனைத்து பகுதிகளையும் கொண்டுவரும் நோக்கில் தூதுவராக அனுப்பப்பட்ட தூதுவர்களின் தலைவன் "அன்ரூ கெதிஸ்"-யை தூக்கிலேற்றிய எத்திலப்ப நாயக்கர்-ன் வீரவரலாறு நமது உடுமலை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.



இன்றளவும் அந்த வெள்ளையனை தூக்கிலிட்ட இடமும் அதற்கு சான்றாக தூக்கிலிடப்பட்ட தூதுவரின் விவரங்களுக்கும் பொறிக்கப்பட்ட கல்வெட்டு சான்றுகளும் "தூக்கு மர தோட்டம்" என்ற பெயரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

எனவே, இதனை தொல்லியல் வரலாற்று வளர்ச்சிக்கான ஆய்வாகவும், இது போன்ற வரலாற்று நிகழ்விடங்களை தொல்லியல் சார்ந்த சுற்றுலா தளமாக மாற்ற மாவட்ட சுற்றுலா அதிகாரி அரவிந்த குமார் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் போது உடுமலை சுற்றுலா வளர்ச்சி குழு உறுப்பினர்களான ஜவஹர், சண்முகம், பிரசாந்த், பொன்ராஜ் மற்றும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் அறக்கட்டளை உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

ஆய்வுக்கு பின்னர் மாவட்ட சுற்றுலா துறை அதிகாரி அரவிந்த குமார் கூறுகையில், தொல்லியல் சுற்றுலா, வரலாற்று சுற்றுலா, கிராம சுற்றுலா இவை போன்ற சுற்றுலாக்கள் வரும் காலகட்டங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகள், கண்டிப்பாக இது போன்ற சுற்றுலா தலங்கள் பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.



மேலும், இவைகளை பிரபலப்படுத்தினால் உள் மற்றும் வெளி மாவட்ட, மாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கும், அதன் மூலம் கிடைக்கக்கூடிய வருவாய்க்கும் உதவும். மேலும், சுற்றுலா வழிகாட்டிகள் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.

இதுபோன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பொது மக்கள் பார்வைக்கும், சுற்றுலா பயணிகளின் பார்வைக்கும், வரலாற்று, தொல்லியல் துறை மாணவர்களுக்கும் அதிக அளவில் தெரியவரும்.

உடுமலையை சுற்றிலும் பல்வேறு வரலாற்று தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளன. எனவே, கண்டிப்பாக தமிழ்நாடு அரசு சுற்றுலா துறை மூலம் இத்தகைய வரலாற்று புராதான இடங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதத்தில் அதனை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் இந்த பகுதிகளின் வளர்ச்சிக்கு சுற்றுலா துறை முக்கிய அளவில் பங்காற்றும்.

விரைவில் அனைத்து வகையான சுற்றுலாக்களும் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை பகுதியில் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு திருப்பூர் மாவட்டம் சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கு பங்கேற்கும் வகையில், சுற்றுலாவில் தமிழ் நாட்டின் முதன்மை மாவட்டமாக திருப்பூர் மாவட்டத்தை கொண்டு வர மாவட்ட சுற்றுலா துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...